வேலூர்:கொண்டசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோயில் தேரோட்டம்!!!
8/03/2025
0
வேலூர் மாவட்டம், கீ. வ.குப்பம் சட்டமன்றத் தொகுதி, தெற்கு ஒன்றியம், கொண்டசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோயிலில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.இந்த தேரோட்டத்தில் திமுக வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், ஒன்றியக் குழு பெருந்தலைவர் என்.இ.சத்யானந்தம், குடியாத்தம் நகர மன்றத் தலைவர் எஸ்.சௌந்தர்ராஜன், மாவட்ட துணைச் செயலாளர் ஜி.எஸ்.அரசு, ஒன்றிய செயலாளர் பிரதீஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவீன்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள், கழக தோழர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.