வேலூர்:துத்திக்காட்டில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்!!!
8/24/2025
0
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, கணியம்பாடி தெற்கு ஒன்றியம், துத்திக்காடு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் திமுக வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் மனு அளித்த பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, வேலூர் வட்டாட்சியர் இல. வடிவேலு, தெற்கு ஒன்றிய செயலாளர் என்.கஜேந்திரன், பேரூராட்சி செயலாளர் பி.அருள்நாதன், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு அரசு துறை அதிகாரிகள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
