அரியலூர்:கூட்டணியை நம்பி மட்டுமே திமுக உள்ளதா? விஜய்க்கு அரசியல் முதிர்ச்சி இல்லை ஜவாஹிருல்லா ஆவேசம்!!!

sen reporter
0

கட்சி ஆரம்பித்தவுடன் ஆட்சியை பிடிக்கும்வாய்ப்புஎல்லாகட்சிகளுக்கும் கிடைப்பதில்லை என்பதை விஜய் புரிந்துகொள்ள வேண்டும் என ஜவாஹிருல்லாகூறினார்.கூட்டணியை மட்டுமே திமுக நம்பியிருப்பதாக விஜய் முன்வைத்த விமர்சனத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார். விஜய்யின் பேச்சு ஓர் அரசியல் முதிர்ச்சியற்ற கருத்து என்றும்அவர்விமர்சித்துள்ளார். அரியலூர்மாவட்டம்ஜெயங்கொண்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், "பிரதமர், முதலமைச்சர்கள் சிறையில் 30 நாட்கள் இருந்தால், அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்திருக்கிறது. அதாவது, ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதில் தீர்ப்பு வருவதற்கு முன்பே அவர்களின் பதவியை பறிப்பதற்கான சட்டம் முன்வடிவுதான் இது.எதிர்க்கட்சிகள் கடுமையாக இதை எதிர்த்திருக்கிறார்கள். ஆனாலும், இந்த எதிர்ப்புகளை எல்லாம் மீறி, இந்த சட்ட முன்வடிவை பாஜக அரசு தாக்கல் செய்திருக்கிறது. பாஜக தனது சர்வாதிகாரத்தனத்தை பல்வேறு வடிவங்களில் நிறைவேற்றி வருகிறது. நாடாளுமன்றத்தின் மாண்புகளுக்கும், மக்கள் போராட்டங்களுக்கும் அது மதிப்பு கொடுப்பதில்லை.

ஜனநாயகத்தின் அடித்தளத்தை தகர்க்கக் கூடிய வகையில், இந்த சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்த மசோதாவை, வெறுமென மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்லாமல், நாட்டின் ஜனநாயக மாண்புகள் நிலைக்க வேண்டும் என்று விரும்பக் கூடியவர்கள் அனைவருமே கடுமையாகஎதிர்க்கவேண்டும்.அதேபோல, பீகார் மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு இருக்கிறது. இதில் பல லட்சக்கணக்கானோர்நீக்கப்பட்டுள்ளன மக்களின் அடிப்படை உரிமை வாக்குரிமையாகும். ஆனால், அந்த வாக்குரிமையையே பறிக்கக் கூடிய வகையில் இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது.அடுத்ததாக, தமிழ்நாட்டிலும் இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், இதுபோன்ற சதித்திட்டங்களை திமுக அரசு முறியடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனாலும், தேர்தல் ஆணையம் ஒன்றிய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், திமுக கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என ஜவாஹிருல்லா கூறினார்.


முன்னதாக, தவெக தலைவர் விஜய் குறித்து ஜவாஹிருல்லாவிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "கூட்டணியை நம்பி மட்டுமே திமுக இருப்பதாக தவெக மாநாட்டில் விஜய் கூறியிருக்கிறார். இது அரசியல் முதிர்ச்சியற்ற கருத்து. கட்சி ஆரம்பித்தவுடன் ஆட்சிக்கு வருவது என்பது எல்லா கட்சிகளுக்கும் சாத்தியம் கிடையாது. இதை விஜய் புரிந்துகொள்ள வேண்டும்.அதேபோல, வாக்காளர் பட்டியலில் பெருமளவுக்கு தில்லுமுல்லு செய்தால் ஒழிய, தமிழ்நாட்டில் பாஜகவால் கால் பதிக்க முடியாது. எனவே, ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையத்தினுடைய இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை தமிழ்நாடு கடுமையாக எதிர்க்க வேண்டும்" என்றார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top