திருப்பத்தூர் பள்ளி மாணவர் உயிரிழந்த விவகாரம் இறுதி சடங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!!!!

sen reporter
0

 பள்ளியில் இருந்த கிணற்றுக்குள் மாணவர் உயிரிழந்து கிடந்த விவகாரத்தில், பல்வேறு போராட்டத்திற்கு பிறகு அவரது உடலைப் பெற பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர்.காவல் துறையின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பூட்டப்பட்டிருந்த கிணற்றில் உயிரிழந்த பள்ளி மாணவர் முகிலனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கின் போது, அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டிருந்து.திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த கொத்தூர் கிராமத்தை சேர்ந்த சின்னதம்பி மகன் முகிலன். இவர், திருப்பத்தூரில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளி விடுதியில் தங்கி, 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முகிலன் காணாமல் போனதாக, அவரது பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த முகிலனின் பெற்றோர், மகனைக் காணவில்லை என திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், போலீசார் மாணவர் முகிலனை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே, ஆக.3 ஆம் தேதி, மாணவர் படித்த பள்ளியில் உள்ள மூடப்பட்டிருந்த கிணற்றிலிருந்து மாணவனின் உடல், சடலமாக மீட்கப்பட்டது.பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவ அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இரும்பு கம்பியால் பூட்டப்பட்டிருந்த கிணற்றில் மாணவன் எப்படி விழுந்தான்? என முகிலனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கேள்வி எழுப்பினர். ஆகையால், தங்களது மகன் இறப்புக்கு நியாயம் வேண்டும் எனவும், பள்ளியை மூடி பாதிரியாரைக் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து,   பள்ளிக்கு சீல் வைக்காமல் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர்கள் மறுத்ததால், முகிலனின் உடல் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலேயே உடல் வைக்கப்பட்டது.

இதற்கிடையே, பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நேற்றும், இன்றும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வேலூரிலிருந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட குழந்தைகள், பாதுகாப்பு அலுவலர், உள்ளிட்டோர் பள்ளியில் ஆய்வு செய்ததுடன், முகிலுடன் படித்த மாணவர்கள் மற்றும் அவரது நண்பர்கள், பள்ளி நிர்வாகத்திடம் விசாரணைமேற்கொண்டனர்.தற்போதுகாவல் துறையின்பேச்சுவார்த்தைக்குப் பிறகு, முகிலனின் உடலை வாங்க அவரது பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, இன்று (ஆக.5) காலையில் மாணவரின் உடல்பெற்றோரிடம்ஒப்படைக்கப்பட்டது. அப்போது, முகிலனின் உடலைக் கண்ட தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம், காண்போரையும் கண்கலங்கச் செய்தது.பின்னர், மாணவரின் உடல் அவரது சொந்த ஊரான நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. வேறு ஏதும் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுப்பதற்காக, பள்ளியைச் சுற்றியும், கொத்தூர் பகுதியை சுற்றியும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top