வேலூர்:கழிஞ்சூர் ஸ்ரீ செல்வ விநாயகர் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு!!!!
8/26/2025
0
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், கழிஞ்சூர் ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சுயம்புவாக தோன்றிய ஸ்ரீ செல்வ விநாயகரை பக்தர்கள் கண்டெடுத்து கோயில் கட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விநாயகர்சதுர்த்திவிழாதொடங்கியதை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்து சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜை மற்றும் அலங்காரத்துக்கான ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் ஸ்ரீ தணிகைவேல் ஐயர் விமரிசையாக செய்திருந்தார். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
