சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், உலக பொருளாதார மன்றம் (WEF) இந்தியாவை ‘டிஜிட்டல் ஹெல்த்’ துறையில் உலக முன்னோடியாக பாராட்டியுள்ளது. இதற்கான காரணம், மைய அரசு செயல்படுத்திய மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள்மற்றும்சீர்திருத்தங்களாகும். அவற்றில் ‘ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்’ (ABDM) மற்றும் ‘ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மிஷன்’ (ABHIM) ஆகியவை அடங்கும். இத்திட்டங்கள் 2020 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தவையாகும்.
ABHIM திட்டம், நாட்டின் முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதார உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதையும், தொற்று நோய் பரவலுக்கு எதிரான தயார்நிலையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. இதன் கீழ், 17,788 ‘ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்’ (கிராமப்புறங்களில்), 11,024 நகர சுகாதார & நல மையங்கள், 3,382 தொகுதி பொதுச் சுகாதார நிலையங்கள், 730 மாவட்ட ஒருங்கிணைந்த பொதுச் சுகாதார ஆய்வகங்கள், மேலும் ஒரு மாவட்டத்தில் ஐந்து லட்சம் மக்களை விட அதிகம் சேவை செய்யும் 602 முக்கிய சிகிச்சை மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன.
இதனுடன், ABDM திட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் ‘ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட்’ (ABHA) வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது 14 இலக்க தனிப்பட்ட அடையாள எண் (Unique ID) உடையதாக இருக்கும், இதன் மூலம் சுகாதார பதிவுகளை எளிதில் சேமித்து, அணுகி, திட்டமிட்டு, சிரமமில்லாத சுகாதார பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம்.
ABDM திட்டத்தின் பிற முக்கிய கூறுகள்:
• ஹெல்த் கேர் புரொஃபஷனல் ரெஜிஸ்ட்ரி (HPR) – சுகாதார தொழில்நுட்ப நிபுணர்கள் பதிவு
• ஹெல்த் ஃபாகல்டி ரெஜிஸ்ட்ரி (HFR) – சுகாதார பீடம் பதிவு
• யூனிஃபைடு ஹெல்த் இன்டர்ஃபேஸ் (UHI) – மருத்துவமனைகள், மருத்துவர்கள், ஆய்வகங்கள் ஆகியவை ஒரே தளத்தில் ஆன்லைனில் இணையும் திறந்த வலைப்பின்னல்
• U-WIN – 0–16 வயதுடைய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்துதலை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் டிஜிட்டல் தளம்
இதுவரை 79 கோடி ABHA அடையாள எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன; இதில் சுமார் 61 கோடி சுகாதார பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளன. 4.14 லட்சம் மருத்துவமனைகள், கிளினிக்குகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட சுகாதார சேவை நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6.65 லட்சம் சுகாதார நிபுணர்கள் ஜூலை 2025 வரை ABDM திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், 10.48 கோடி பயனாளர்கள் U-WIN இல் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 93.91 லட்சம் பயனாளர்கள் தடுப்பூசி பெற்றுள்ளனர். மற்றொரு புறம், 1.88 கோடி தடுப்பூசி முகாம்கள் மற்றும் 41.73 கோடி தடுப்பூசி டோசுகள் மே 2025 வரை வழங்கப்பட்டுள்ளன.
மேலும், 2020-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தேசிய தொலை மருத்துவ சேவை ‘ஈ-சஞ்சீவனி’ உலகின் மிகப்பெரிய முதன்மை சுகாதார தொலை மருத்துவ தளமாக உருவெடுத்துள்ளது. ‘ஈ-சஞ்சீவனி’ 36 கோடி நோயாளிகளுக்கு இலவசமாகவும் தொலை மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. இது கூடுதலாக 130 சிறப்பு நிபுணர் மருத்துவர்களையும், 2,32,291 சுகாதார சேவை வழங்குநர்களையும் தனது விரிவான வலையமைப்பில் இணைத்துள்ளது.இந்த புரட்சிகரமான முயற்சிகளின் மூலம், இந்தியா தொடர்ந்து முன்னேறி கொண்டு இருக்கிறது. ‘விக்சித் பாரத் @2047’ என்ற நோக்கத்தை அடைவதற்காக ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் எதிர்காலத்துக்கு தயாரான சுகாதார அமைப்பாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. டிஜிட்டல் சுகாதார சேவைகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, இந்தியர்கள் ‘நல்ல ஆரோக்கியமும் நலமும்’ என்ற நிலையான வளர்ச்சி குறிக்கோளை அடைவதற்கான பயணத்தில், 2047-ஆம் ஆண்டுக்குள் ‘ஸ்வஸ்த்ய பாரத்’ கனவை நிறைவேற்றுவதற்கான அடித்தளமாக அமைந்துள்ளது.
