அரியலூர்:விராட் கோலியை விமர்சித்த நண்பன் கொலை இளைஞருக்கு ஆயுள் தண்டனை!!

sen reporter
0

விராட் கோலியை பற்றி விமர்சித்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் நண்பரை கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொலை செய்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரரை அவதூறாக பேசிய நண்பனை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மாவட்டமுதன்மைநீதிபதிஉத்தரவிட்டார்.தமிழ்நாட்டில் ஐபிஎல் போட்டிகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சர்வதேசஅளவில்நடக்கும்போட்டிகளின் போதுஇந்தியரசிகர்களாகஇருப்பவர்கள், ஐபிஎல் சீஸனின் போது வெவ்வேறு அணிகளுக்குரசிகர்களாகிவிடுகின்றனர். இதனால், நண்பர்களாக இருப்பவர்கள் கூட எதிரெதிர் பக்கமாக நின்று தங்களது அணிகளுக்கு ஆதரவு அளித்தும், மாற்று அணிகளை விமர்சித்தும் வருகின்றனர். இது சில நேரங்களில் விபரீதத்திலும் சென்று முடிகிறது.குறிப்பாக ஐபிஎல் சீஸனின் போது சென்னை, ஆர்சிபி, மும்பை ஆகிய அணிகளின் ரசிகர்களிடையே ஏற்படும் கருத்து மோதல் சமூக வலைத்தளங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தும். அந்த வகையில், தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரரை விமர்சித்து பேசிய நண்பனை கொலை செய்த இளைஞருக்கு அரியலூர் நீதிமன்றம் ஆயுள்தண்டனைவிதித்துதீர்ப்பளித்துள்ளது.அரியலூர் மாவட்டம், பொய்யூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் தர்மராஜ் மற்றும் விக்னேஷ். இவர்கள் இருவரும் அவ்வப்போது கிரிக்கெட் விளையாடி வந்துள்ளனர். மேலும் தர்மராஜ், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் தீவிர ரசிகராகவும், விக்னேஷ், ரோகித் சர்மாவின் தீவிர ரசிகராகவும் இருந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு, அக்டோபர் 11-ம் தேதி இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஐபிஎல் போட்டிகள் நடந்து கொண்டிருந்தன. இருவரும் அவரவர்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அவர்கள் இடம் பெற்றுள்ள அணிகளைப் பற்றி கருத்துக் கூறி வந்துள்ளனர். அப்போது விக்னேஷ் விராட் கோலியை விமர்சித்துபேசியதாககூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ், விக்னேஷை மது அருந்த செல்லலாம் என பொய்யூர் அருகே உள்ள ஓடைப்பகுதிக்கு தனியாக அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து விக்னேஷை கிரிக்கெட் பேட்டால் அடித்து தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதி மலர் வாலண்டினா இன்று தீர்ப்பளித்தார். தர்மராஜ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி மலர் வாலண்டினா தீர்ப்பளித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top