
பள்ளி கல்லூரி மாணவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன்பங்கேற்புகோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பில், இதயக் குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில், தொடர்ந்து 3 வது ஆண்டாக "ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்' என்ற விழிப்புணர்வு மாரத்தான்நடைபெற்றது.எல்.எம்.டபிள்யூ,லஷ்மி மில்ஸ் நிறுவனம்,லஷ்மி கார்டு குளோத்திங்,மாவட்ட தடகள சங்கம் ஆகியோர் இணைந்து நடத்திய இதற்கான துவக்க விழா மணி மேல்நிலைபள்ளியில்நடைபெற்றது. ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மைசெயல்அதிகாரிடாக்டர். ரகுபதி வேலுசாமி தலைமையில் நடைபெற்ற இதில்,கோவை போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையாளர் கோகுலகிருஷ்ணன் மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.பொதுமக்கள் அனைவரும் குழந்தைகள் புற்றுநோய் மற்றும் குழந்தைகளின் இதய குறைபாடுகள் குறித்து போதிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக,பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில்ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்ஆர்வமுடன்கலந்துகொண்டனர்.குறிப்பாக ஜி.கே.என்.எம் மருத்துவமனையில், புற்றுநோய் மற்றும் இருதய குறைபாடுகளுக்காக சிகிச்சை பெற்று குணமடைந்த குழந்தைகளும் இந்த மரத்தானில் கலந்து கொண்டு ஓடினர் என்பது குறிப்பிடத்தக்கது.