வேலூரில்உலக தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கவியரசு கண்ணதாசன் மற்றும் விருது வழங்கும் விழா!!!!

sen reporter
0

வேலூர் சத்துவாச்சாரி, சோலை அரங்கத்தில் 28ஆம் தேதி மாலை 4 மணி அளவில் வேலூர் உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கவியரசு கண்ணதாசன் மற்றும் விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு உலக தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பொறியாளர்கு.வெங்கடேசன்தலைமைவகித்தார்.உதவும்உள்ளங்கள் தலைவர் இரா. சந்திரசேகரன், புலவர் நா. சதாசிவன், கவிஞர் அறிவுச்சுடர் முன்னிலை வகித்தனர். உலக தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வேலூர் செயலாளரும், அரிமா செவாலியே டாக்டர் சி. பி. தேசி அனைவரையும் வரவேற்றார் வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் மருத்துவரும், உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நிறுவன தலைவருமான சமரசத்தின் மகன் மருத்துவர் இனியன் சமரசம் தொடக்க உரையாற்றினார். அதில் அவர் குறிப்பிட்டு பேசுகையில், இந்த சங்கம் தொடங்கி 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. தமிழ் மொழியானது 2000 ஆண்டுகள் பழமையானது. தமிழ் மொழி எழுத்து மொழியாக இருக்க வேண்டும் .பேச்சு மொழியாக இருக்கக் கூடாது என்று குறிப்பிட்டு பேசினார் .அத்துடன் தனது தந்தை சமரசம் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோருடன் இருந்த நெருக்கத்தைப் பற்றியும் விரிவாக விளக்கிக் கூறினார். இது பார்வையாளர்கள் அனைவரையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து தந்தை பெரியார் ஓர் சமுதாய சிற்பி என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. இதற்கு இலக்கியச்சுடர் வெ. சோலைநாதன் தலைமை வகித்தார். புலவர் சு. மோகன் குமார் ,கவிஞர் சொக்கர் மணாளன் பங்கேற்று கவி பாடினர். இதை யடுத்து பேரறிஞர் அண்ணா ஓர் சகாப்தம் என்ற தலைப்பில் நடந்த கவியரங்கத்தில் முனைவர் பொன். செல்வகுமார் ,கவிஞர் பெருமாங் குப்பம் சா.சம்பத்து
ஆகியோர் கவி பாடினர் . வேலூர் கலைஞர் கண் மருத்துவமனையின் நிறுவனர், மருத்துவர் தி.ச.முகமது சயி வாழ்த்துரை வழங்கினார் .இதை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கவியரசு கண்ணதாசன் அவர்களின் காவியங்கள் என்ற தலைப்பில் வாய்ஸ் ஆஃப் எக்கோவின் இன்னிசை பாடல்களாக மேடையில் பாடி காண்பித்து காண்போரின் கவனத்தை சுண்டி இழுத்தது. பார்வையாளர்களது நாடி நரம்புகளை முறுக்கேறச் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியை நெறியாளராக இருந்து சித்ரா தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வேலூர் தலைவர் பொறியாளர் கு. வெங்கடேசன், செயலாளர் அரிமா செவாலியே டாக்டர் சி .பி. தேசி, பொருளாளர் மாதி சி. குப்பன் ஆகியோர் சீரும் சிறப்புமாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது. இறுதியாக கவிஞர் இரா. சீனிவாசன் நன்றி கூறினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top