கோயம்புத்தூர் விமான நிலையத்தில் நடைபெற உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்து விமான நிலைய பொறுப்பு இயக்குனர் ஜி.சம்பத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்!!!

sen reporter
0

Yatri Sewa Diwas தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி கோயம்புத்தூர் விமான நிலையத்தில் நடைபெற உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்து விமான நிலைய பொறுப்பு இயக்குனர் ஜி.சம்பத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், கோயம்புத்தூர் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். மேலும், நாளை Yatri Sewa Diwas தினத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் விமான நிலைய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது,பயணியர் தினம் நாளை கொண்டாடப்பட இருக்கின்றது.யத்ரி சேவா திவாஸ், என்ற பெயரில் இந்த தினம்அனுசரிக்கப்படுகின்றது.இதனையொட்டி நாளை காலை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு வரவேற்பு, மரம் நடுதல், கலை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவர்களுக்கு விமான நிலையம் குறித்து விழிப்புணர்வு, ரத்ததானம், கண் பரிசோதனை என பல்வேறு நிகழ்ச்சிகள்நடத்தப்படஇருக்கின்றது.கோவை விமான நிலையத்தில் நாள்தோறும் 27 விமானங்கள் வந்து செல்கின்றன. அதில் 3000 பயணிகள் வருகின்றனர். அவர்களை சிறப்பாக வரவேற்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது' என தெரிவித்தார். கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர்,விமான நிலைய விரிவாக்கம் 605 ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட இருக்கிறது. இதற்கான சர்வே ஜனவரியில் இருந்து நடந்து வருகின்றது.மாநில அரசுடன் இணைந்து அளவீடு பணிகள் நடைபெற்று வருகின்றது. அது முடிந்தவுடன் தான் விமான நிலைய விரிவாக்க பணிகள் துவங்கும். மேலும், சுற்றுசுவர் அமைக்க டெண்டர் விடப்பட்டு உள்ளது. செப்டம்பர் 26 ம் தேதிக்குள்சுற்றுச்சுவர்அமைக்கப்படும்.இப்போது 2,900 மீட்டர் ஒடுபாதை இருக்கிறது.விரிவாக்கத்திற்குபின்பு  3,800மீட்டராகவிமானநிலையஓடுபாதைஅமையஉள்ளது.இப்பொழுது இருக்கும் விமானநிலையகட்டிடம்அகற்றப்படும்.விமான நிலையத்தன் முகப்பு தோற்றம் வேறுபகுதிக்குமாற்றப்படும்.இப்போது, 18000 சதுர அடியாக இருக்கும் விமான நிலையம் , 4 மடங்கு அதிகமாக 75000 சதுர அடியாக விரிவுபடுத்த படுகின்றது' என தெரிவித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top