ஃபோர்டு நிறுவன வேலைவாய்ப்பு குறித்து பேசிய அமைச்சர், “ஃபோர்டு நிறுவனத்தால் ரூ.3,250 கோடி முதலீட்டின் மூலம் 600 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மறைமுகமாக இன்னும் அதிகமான வேலைவாய்ப்புகள் வந்து சேரும். அடுத்த தலைமுறை வாகன இன்ஜின் உற்பத்தி செய்வதற்கும்புரிந்துணர்வுஒப்பந்தம்மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக, 2,35,000 புதிய இன்ஜின்களை ஃபோர்டு நிறுவனம் சென்னை மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யவுள்ளது. 12,000 இளைஞர்கள் சென்னை ஃபோர்டு குளோபல் கெபாபிலிட்டி சென்டரில் பணியாற்றி வரும் நிலையில், இதனை அதிகப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஃபோர்டு நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார். இது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என டிஆர்பி ராஜா கூறினார்.முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த ’வின்ஃபாஸ்ட்’ நிறூவனத்தின் கார் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த கார் தொழிற்சாலை ரூ.1,119.67 கோடி மதிப்பீட்டில் 114 ஏக்கரில் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை:தமிழ்நாட்டில் மீண்டும் திறக்கப்படும் ஃபோர்டு தொழிற்சாலை! 3,250 கோடி ரூபாய் முதலீட்டில் ஒப்பந்தம்!!!
10/31/2025
0
தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 2,35,000 புதிய இன்ஜின்களை ஃபோர்டு நிறுவனம் சென்னை மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யவுள்ளது என அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறியுள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து மூடப்பட்ட ஃபோர்டு கார் நிறுவனம், மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். மேலும், ரூ.3250 கோடி முதலீட்டில், 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஃபோர்டு நிறுவனம் திறக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.அமெரிக்காவின் ஃபோர்டு கார் நிறுவனம் - தமிழ்நாடு அரசு இடையேயான ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது. இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெளியே அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும் தொழிற்சாலை துவங்குவதற்கு உறுதியளித்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மூடிக்கிடந்த ஃபோர்டு நிறுவனம் தற்போது மீண்டும் திறக்கப்படவுள்ளது.தற்போதுள்ள உலக புவிசார் அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சில நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர், வர்த்தகப் போர் போன்ற உலகளாவிய நெருக்கடிக்கு நடுவே, தமிழ்நாட்டில் வெற்றிகரமாக மீண்டும் ஃபோர்டு நிறுவனத்தை கொண்டு வந்துள்ளோம். எவ்வளவு கடினமாக உழைத்திருந்தால், இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனத்தை கொண்டு வந்திருக்க முடியும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
