கோவை:மாருதி சுசுகியின் 5000வது அரீனா சர்வீஸ் சென்டர் கோவையில் திறப்பு!!!

sen reporter
0

அம்பாள் ஆட்டோ நிறுவனத்தின் கீழ் பிரம்மாண்ட சர்வீஸ் சென்டர் மலுமிச்சம்பட்டியில் உதயம்மாருதி சுசுகிஇந்தியாலிமிடெட்நிறுவனமானது இந்தியாவில் அதன் 5000வது அரீனா சர்வீஸ் சென்டரை கோவை மலுமிச்சம்பட்டியில் இன்று திறந்தது.  மாருதி சுசுகி இந்தியா லிமிடெட்டின் நிர்வாக அதிகாரி (சேவை) ராம் சுரேஷ் அக்கெலா மற்றும் நிர்வாக துணைத் தலைவர் (சேவை)  தகாஹிரோ ஷிராயிஷி ஆகியோர் இதை அம்பாள் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அசோகன் முத்துசாமி; துணை தலைவர் அனீஸ் முத்துசாமி ; சந்தான செல்வி மற்றும் ஸ்ருதி அனீஷ் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.இந்த சேவை மையம் 45,000 சதுரஅடிபரப்பளவில்கட்டப்பட்டுள்ளதுடன், அம்பாள் ஐ.டி.ஐ-யில் பயிற்சியை முடித்து, மாருதி சுசுகியால் சான்றளிக்கப்பட்ட நன்கு பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட வலுவான குழுவைக் கொண்டுள்ளது.

இந்த மையத்தில் வாகனங்களுக்கான சேவைகள் மற்றும் விபத்து பழுதுபார்ப்புகள் ஆகிய இரண்டையும் ஒரே கூரையின் கீழ் தரமாக மேற்கொள்ள முடியும். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சேவை தேவைப்படும் வாகனங்களுக்கு, அதை 120 நிமிடங்களில் செய்து, அன்றைய தினமேவாடிக்கையாளரிடம்ஒப்படைக்க முடியும்.மாருதிசுசூகிகார்களை டாக்சி களாகபயன்படுத்துவோருக்கு இதனால் அதிக பலன் கிடைக்கும்.மேலும் இந்த வளாகம் என்பது மாருதி சுசுகி மின்சார வாகனங்களுக்கு தேவையான சர்வீஸ் பணிகளை வழங்க தயாராக இருக்கும்படி அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top