ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த திருமூர்த்தியின் மகன் மதன்குமார்(27). கனடாவில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்த இவருக்கு, கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் திருமணமாகியுள்ளது. மனைவியுடன் கனடாவில் வசித்து வரும் மதன்குமார் தலை தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாட முடிவு செய்து, இந்தியாவிற்கு புறப்பட்டுள்ளார். மதனின் மனைவி ஒரு மாதத்திற்கு முன்பேதமிழ்நாடுவந்துள்ளார். இந்நிலையில், கனடாவிலிருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்த மதன்குமாரை, ஈரோடு அழைத்து வருவதற்காக அவரது நண்பர்களான சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த முகிலன் (30), கோகுல் (28), மணிவண்ணன் (28) ஆகிய மூன்று பேரும் காரில் பெங்களூரு விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
தொடர்ந்து, மதன்குமாரை அழைத்து கொண்டு நள்ளிரவில் ஈரோடு நோக்கி புறப்பட்டபோது, காரை மணிவண்ணன் ஓட்டி வந்துள்ளார். அதிகாலை 4 மணியளவில் ஓசூர் பேரண்டபள்ளி அருகே வந்த போது, இவர்களது காருக்கு முன்னே கண்டெய்னர் லாரி, கார் மற்றும் சரக்கு வேன் என 3 வாகனங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.அப்போது, இளைஞர்களின் காருக்கு பின்னால் வந்த லாரியும் கட்டுப்பாட்டை இழந்து, கார் வேகமாக மீது மோதியுள்ளது. அப்போது லாரிக்கும், பிக்கப் வேனுக்கும் இடையே சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில், காரில் பயணம் செய்த 4 இளைஞர்களும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.விபத்தில்உயிரிழந்தகோகுல்,மதன் குமார், முகிலன், மணிவண்ணன்விபத்தில் உயிரிழந்த கோகுல், மதன்குமார், முகிலன், மணிவண்ணன் (ETV Bharat Tamil Nadu)விபத்தில் உயிரிழந்த 4 பேரும் ஒன்றாக படித்தவர்கள். இதில் முகிலன் யுபிஎஸ்சி தேர்வெழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்துள்ளார். கோகுல் மற்றும் மணிவண்ணன் இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியராக பணி புரிந்து வந்துள்ளனர்.
இதற்கிடையே விபத்துக்குள்ளான வாகனங்களை ஜேசிபி மூலம் அப்புறப்படுத்தினர். இதனால், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அக்ஷய் அனில் வாக்கரே ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில்சென்றுவிசாரணைநடத்தினர். அப்போது, விபத்தை ஏற்படுத்திய சரக்கு லாரி கர்நாடகா மாநிலம் மாலூரில் இருந்து பழைய பேப்பர் பாரம் ஏற்றிக்கொண்டு சூளகிரி அருகே உல்லட்டி நோக்கி சென்ற போது, இந்த விபத்து ஏற்பட்டதாகதெரியவந்துள்ளது. இதையடுத்து உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் கிரிஷ்(30) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
