கோவை:உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர்கள் மக்களின் விழிப்புணர்வுக்காக பக்கவாத விழிப்புணர்வு!!!
10/30/2025
0
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பக்கவாத விழிப்புணர்வு மற்றும் அதன் தடுப்பு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பக்கவாத விழிப்புணர்வு பதாகை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நரம்பியல் துறைத் தலைவர் மற்றும் தலைமை நரம்பியல் நிபுணர் டாக்டர் அசோகன் வரவேற்புரையாற்றினார் தொடங்கியது. சமூகத்தில் நோய் தடுப்பு விழிப்புணர்வை வளர்ப்பதில் மருத்துவமனையின் உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்தினார். ஆரம்ப அறிகுறிகளை உடனடியாகக் கவனிப்பதும், தகுந்த மருத்துவ உதவியைத் தேடுவதும்,மேலும் சரியான சிகிச்சை மற்றும் புனரமைப்பு வழங்குவதும் (Rehabilitation) நோயாளி மீண்டுவர உதவுகிறது என அவர் குறிப்பிட்டார்.
