அப்போது பேசிய ராமதாஸ், மருத்துவமனையில் ஐசியு-வுக்கு செல்லும் அளவுக்கு எனக்கு ஒன்றுமில்லை. இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டது அவ்வளவு தான். இப்போது நான் நன்றாக உள்ளேன். நான் மருத்துவமனையில் இருந்த போது கட்சி பாகுபாடின்றி அனைத்து அரசியல் கட்சியினரும் என்னிடம் நேரிலும், தொலைபேசியிலும் நலம் விசாரித்தனர். ஒரு கட்சி மட்டும்தான் நலம் விசாரிக்கவில்லை. அது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி. உடல் நலம் குறித்து விசாரித்த அனைத்து கட்சியினருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில்அறிக்கைவெளியிட்டேன். ஆனால், அன்புமணி எனக்கு உடல்நலம் குறைவு ஏற்பட்டதற்கு யாரோ காரணம் என வீண் பேச்சு பேசுகிறார். அது போல் மாடு மேய்க்கும் சிறுவன் கூட பேச மாட்டான். நான் முன்பே நிர்வாக குழுவில் கூறினேன், அன்புமணிக்கு தலைமை பண்பு சிறிதளவும் இல்லை. தலைமைப் பண்புக்கு தகுதியற்றவர் அன்புமணி என்றார்.தொடர்ந்து அன்புமணி குறித்து பேசிய ராமதாஸ், அன்புமணி தனிக்கட்சி தொடங்கிக் கொள்ள வேண்டும். அது தான் அன்புமணிக்கும் நல்லது, அவரை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது. புதிய கட்சி தொடங்கினால் பொறுப்புகள் தான் கிடைக்கும். சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி கிடைக்காது. மக்கள் யாரும் அன்புமணிக்கு வாக்களிக்க மாட்டார்கள். டிசம்பர் 30 ஆம் தேதி என்னுடைய தலைமையின் கீழ் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டணி குறித்த முக்கிய முடிவு அந்த கூட்டத்தில் எடுக்கப்படும். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்பது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும்” என்றார்.
விழுப்புரம்:கூட்டணி குறித்த முடிவை நானே எடுப்பேன் பொதுக்குழு கூட்டத்துக்கு நாள் குறித்த ராமதாஸ்!!!
10/16/2025
0
அன்புமணி தனிக்கட்சி ஆரம்பித்து கொள்ள வேண்டும். அதுதான் அன்புமணிக்கும் நல்லது, அவரை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது என பாமகநிறுவனர்ராமதாஸ்கூறியுள்ளார்.டிசம்பர் 30 ஆம் தேதி என்னுடைய தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில் பாமக யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்ற அறிவிப்பு வெளியாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸ் இதய பரிசோதனைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அக்டோபர்5ஆம்தேதிஅனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாதக தலைமை ஒருகிணைப்பாளர் சீமான் உள்பட பல்வேறு தலைவர்கள் நலம் விசாரித்தனர்.இந்நிலையில் சிகிச்சை நிறைவு பெற்று அக்டோபர் 7 ஆம் தேதி அவர் தைலாபுரம் இல்லத்துக்கு திரும்பினார். தொடர்ந்து கடந்த 14 ஆம் தேதி தைலாபுரம் இல்லத்தில் பாமக நிர்வாக குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
