பல்வேறு காரணங்களால் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தும் நிகழ்வுகள் தொடர்கதையாக உள்ளது. இதனை தடுக்க, பயிர் மற்றும் உடைமைகளுக்கு சேதம் ஏற்பாடமல் இருக்க விவசாயிகள் தங்கள் விளைநிலங்களிலும், தனியார் நிலங்களிலும் மின்வேலி அமைக்கின்றனர். சிலர் சோலார் மின்வேலிகளுக்கு பதிலாக, மின்சாரத்தில் நேரடி இணைப்பு கொடுக்கின்றனர். இத்தகைய மின்சார வேலிகளில் வனவிலங்குகள் சிக்கி உயிரிழக்கின்றன. சில சமயங்களில் மனிதர்களும் மின்வேலிகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.வனவிலங்குகளை பாதுகாக்கவும், மின்வேலிகள் அமைப்பதை ஒழுங்குபடுத்தவும், தமிழக அரசு சார்பில், தமிழ்நாடு மின் வேலிகள் (பதிவு மற்றும் ஒழுங்குமுறை) விதிகள் 2023 இல் அறிவிக்கப்பட்டன. இதன்படி, காப்புக்காட்டில் இருந்து 5 கி.மீ., தொலைவு வரை உள்ள விவசாய நிலங்களில், சோலார் மின் வேலிகள் அமைக்க, மாவட்ட வன அலுவலரிடம் முன்அனுமதிபெறவேண்டும். ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளை பதிவு செய்ய வேண்டும். விளைநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளை, வனத்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழு, 15 நாட்களுக்கு ஒருமுறை கள ஆய்வு செய்து விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
பெரம்பலூர்:வனவிலங்குகளை தடுக்க மின்வேலி அமைத்தவரே மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்!!!!
10/12/2025
0
பெரம்பலூர் அருகே வெண்பாவூர் கிராமத்தில் வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் நுழைவதைத் தடுக்க விதிகளை மீறி அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி இரண்டு விவசாயிகள் பரிதாபமாகஉயிரிழந்தனர்.வனவிலங்குகளிடம் இருந்து விளைநிலத்தை பாதுகாக்க சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த நபர் மற்றும் மற்றொரு பெண் விவசாயி அதே வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பெரம்பலூர் மாவட்டம் வெண்பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (62). விவசாயியான இவர் தனது நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க, தனது வயலை சுற்றி மின்வேலி அமைத்திருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று காலை மாடுகளுக்கு பால் கறக்க வயலுக்குச் சென்ற பெரியசாமி, தனது நிலத்தில்மின்வேலிபோடப்பட்டிருப்பதை மறந்து, கவனிக்காமல் மின் கம்பியை மிதித்துள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்துள்ளார்.இதனிடையே, பெரியசாமி வயலுக்கு அருகில் உள்ள தனது குத்தகை நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் (55) என்பவர் பூச்சிக் கொல்லி மருந்து அடிக்க சென்றுள்ளார். அப்போது பெரியசாமியின் வயலில் உள்ள தொட்டியில் தண்ணீர் எடுக்க சென்றதாக தெரிகிறது.அப்போது மின்வேலி இருப்பதை அறியாமல் அவர் கம்பியை தொட்டதில் மின்சாரம் தாக்கி அவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அடுத்தடுத்து இரண்டு பேர் மின்சாரம் தாக்கி விவசாய நிலத்தில் உயிரிழந்து கிடந்துள்ளனர். இதைப்பார்த்த வயலுக்கு வந்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்த நிலையில் உடனடியாக கைகளத்தூர் போலீசாருக்குதகவல்கொடுத்துள்ளனர்சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வனவிலங்குகளிடமிருந்து பயிரைக் காக்க மின்வேலி அமைத்தவரே அதே மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
