வேலூர்: அக்குடியாத்தத்தில் மின்னொளியில் இரண்டு நாட்கள் ஜூனியர் கபடி போட்டி!!!!

sen reporter
0

எவரெஸ்ட் கேம்ஸ் கிளப் மற்றும் வேலூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் இணைந்து ஜூனியர் ஆண்கள், பெண்கள் கபடி போட்டியை இரண்டு நாட்கள் குடியாத்தம் பவன் உள்விளையாட்டு அரங்கத்தில் மின்னொளியில் நடத்தியது. போட்டிக்கு மாவட்ட அமெச்சூர் கபடி கழக துணைத் தலைவர் இராசி. தலித் குமார் தலைமை தாங்கினார். போட்டியை ஒன்றிய குழு உறுப்பினர் இமகிரி பாபு, ஒன்றிய குழு உறுப்பினர், நகர காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன், அரசு வழக்கறிஞர் லோகநாதன், நகர மன்ற உறுப்பினர் தீபிகா தயாளன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். ஊராட்சி மன்ற தலைவர்கள் மோகன் சுந்தர், தோன்றல் நாயகன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்த போட்டியின் நடுவர்களாக கோபாலன், மோகன், சிவராமன், பாஸ்கர், முத்து பணியாற்றினர். மேலும் அமெச்சூர் கபடி கழக பொருளாளர் அம்மன் ரவி கலந்து கொண்டார். அனைவருக்கும் எவரெஸ்ட் கபடி கழகத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் பணமுடிப்பு, கோப்பைகள் வழங்கப்பட்டது. ஜெயேந்திரன், அஜய், சுரேந்திரன், தரணி ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.


 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top