கோவை:கட்டிட கலையில் அபார வளர்ச்சி பெறும் அலங்கார விளக்குகள் விற்பனை!!!

sen reporter
0

வீடு அழகு படுத்துவதில்அழகான லைட்டுகள்முக்கியபங்குவகிப்பதாகவும்,லைட்டுகளை தேர்வு செய்து வாங்குவதில் தற்போது பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக மிஸ்டர் லைட் நிறுவனத்தின் இயக்குனர் கோவையில்தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவில் வீடு மற்றும் அலுவலகங்களை அழகு படுத்தும்  விளக்குத் துறையில் முன்னணி நிறுவனமாக திகழும்  மிஸ்டர் லைட்  (Mr. Light,) நிறுவனம்  தனது புதிய 12,000 சதுர அடி  ஷோரூமை கோவை அவினாசி சாலையில் துவங்கி உள்ளது.பிரம்மாண்டமாக 12000 சதுர அடியில் துவங்கி உள்ள ஷோரூமில் உள்ளூர் மட்டுமின்றி இறக்குமதி செய்யப்பட்ட பல்வேறு விதமான அலங்கார விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மிஸ்டர் லைட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜன் பதிஜா மற்றும் சரண் பதிஜா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.முன்னதாக பேசிய ராஜன் பதீஜா கடந்த 40  ஆண்டுகளுக்கும் மேலாக இந்த துறையில் செயல்பட்டு வருவதாக கூறிய அவர், புதிதாக வீடு கட்டுபவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அனைத்து விதமான விலைகளிலும் நல்ல தரமான விளக்குகள் இங்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.தற்போது வீடு, அலுவலகங்கள்,தனி வில்லாக்கள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகள் என அனைத்து நிலை மக்களும் வீடுகளை அலங்கரிக்க அழகான விளக்குகளை பயன்படுத்துவதில் கூடுதல் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய சரண்,சென்னையில் இரண்டு கிளைகளை தாம் நிர்வகித்து வருவதாகூறியஅவர்,அமெரிக்காவில் கலிபோர்னியா நகரில் அமைக்கப்பட்ட கோவிலுக்கு தமது நிறுவனம் விளக்குகள் செய்து கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.ஒளி என்பது வெறும்  வெளிச்சம் என்பதை தாண்டி  அது ஒரு இடத்தை உயிர்ப்பிக்கும் கலை" என்று கூறியராஜன்பதிஜா,இதில்கட்டிடக்கலைமற்றும்தொழில்நுட்பவிளக்குகள்,அழகியல்அலங்காரவிளக்குகள்சர்வதேசசந்தைகளிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை உள்ளரங்க மற்றும் சூழல் விளக்குகள், புறங்காணல் மற்றும் தோட்ட விளக்குகள் என அனைத்து இடங்களையும் அழகு படுத்தும் விளக்குகள் இங்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்..

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top