வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகம் என்பதால் அணையை ஒட்டியுள்ள தட்டகானப்பள்ளி, பெத்த கொள்ளு, சின்ன கொள்ளு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆற்றில் இரங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை கழுவவோ வேண்டாமென வருவாய்த் துறையினர் ஒலிபெருக்கி மூலம் பாதுகாப்பு எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தின் ஆலைகளில் இருந்து கழிவுநீர் அணையில் கலக்கப்பட்டுவதால் அணையில் நச்சு நுரைகளுடன் நீர் வெளியேறுகிறது. அந்த தண்ணீர் விவசாய நிலங்களை சென்றடையும் நிலையில் அவை பயிர்களை வீணாக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரியை போல் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் கனமழை பெய்து வருகிறது. அதனால், கெலவரப்பள்ளி அணை விரைந்து நிறைந்து வருகிறது. அதில் இருந்து வெளியேற்றப்படும் நீரில் அதிகபடியான நுரை பொங்கி வருகிறது. காரணம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆலைகளின் கழிவுநீர் அணைக்கு வருகிறது. ஏற்கனவே கர்நாடக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் இதுகுறித்து பல்வேறு கட்டுபாடுகளை விதித்திருந்தன. ஆனால், தொடர்ந்து அணையில் நச்சு கலக்கப்பட்டு வருகிறது. இந்த விஷ நீர், காய்கறிகள், கீரைகளை சென்றடையும்போது அதும் நஞ்சாக மாறும் பாதிப்பு உள்ளது. அரசு உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
