இதில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல தொழிலதிபர்களான மன்னா மெஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும்ங நிர்வாக இயக்குனர் ஜெயராஜ் மற்றும் சோஷியல் ஈகிள் நிறுவனர் தரணிதரன் ஆகியோர் கலந்து கொண்டு மித்ரா செயலியை அறிமுகம் செய்து வைத்தனர்.முன்னதாக மித்ரா செயலியின் பயன்பாடுகள் குறித்து சந்தோஷ் கோபு கூறுகையில்,வீட்டு உபயோக பொருட்களை சரிசெய்வதில் அலைச்சல்களை தவிர்க்க இந்த செயலியை உருவாக்கி உள்ளதாக தெரிவித்தார்.மித்ரா செயலியில் வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மற்றும் தேவை படும் சேவைகள் குறித்து சிறிய தகவல்கள் பதிவு செய்தால் ஒரு மணி நேரத்தில் டெக்னிஷீயன்கள் நேரடியாக வீடுகளுக்கே வந்து பொருட்களை சர்வீஸ் செய்யவோ அல்லது பழுது பார்த்து தருவதாக தெரிவித்தார்.இந்த சேவையில் , டிவி, பிரிட்ஜ், வாசிங்மெசின், ஏசி ஆகியவை சிறந்தமுறையில் சர்வீஸ் செய்து தரப்படுவதாகவும், அனைத்து பிராண்ட் பொருட்களும்சர்வீஸ்செய்யப்படுவதாக தெரிவித்தார்.தற்போது கோவையில் மட்டும் துவங்கி உள்ள இந்த சேவை விரைவில் அனைத்து இடங்களிலும் விரிவு படுத்த இருப்பதாக தெரிவித்தார்..
