கோவை:Sir என சொன்னால் தி.மு.க வுக்கு பயம் வந்து விடுகிறது விஜய் கொடுத்த பணத்தை திருப்பி அனுப்பியது ஏன் ? நயினார் நாகேந்திரன் பரபரப்புப் பேச்சு!!!

sen reporter
0

சார் என்று சொன்னாலே திமுகவுக்கு பயம் வந்து விடுகிறது, போலி வாக்காளர்களை சேர்த்ததால் தி.மு.க வுக்கு தேர்தலில் தோல்வி ஏற்படும் என நினைத்து இதை பற்றி பேசி வருகிறார்கள் என தமிழக பா.ஜ.க தலைவர் நைனார் நாகேந்திரன் விமர்சித்து உள்ளார்.இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்காகக் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது அவர் பேசும்போது துணை ஜனாதிபதியாகத் தமிழகத்திற்குப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக வருகை தரும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பா.ஜ.க சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாகவும், அதன் பின் அவர் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.அப்போது, பல்கலைக் கழக சம்பவத்திற்குப் பிறகு, தி.மு.க விற்கு 'சார்' என்று சொன்னாலே தி.மு.க விற்கு பயம் வந்துவிடுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.வாக்காளர் கணக்கெடுப்பு குறித்துப் பேசிய அவர், நேரு காலத்தில் இருந்தே இந்த கணக்கெடுப்பானது செய்யப்பட்டு வருகிறது என்றும், பீகாரில் நடந்த சம்பவத்தில் 65 லட்சம் பேரில் 30 லட்சம் பேர் இடம் பெயர்ந்து விட்டார்கள், மீதமுள்ளவர்கள் இறந்து விட்டார்கள் என்றும் குறிப்பிட்டார். ஆனால், கொளத்தூர் தொகுதியில் 900 வாக்குகள் அதிகமாக உள்ளன என்று தெரிவித்த அவர், தி.மு.க அமைச்சர்கள் அனைவரும் போலியாகச் சேர்த்த வாக்காளர்கள் பற்றி தெரிந்து கொள்ள நேரிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர் என்றும், இதனால் வெற்றி வாய்ப்பு கிடைக்காது என்று பயப்படுகிறார்கள் என்றும் கூறினார். இந்த நிகழ்வைத் தமிழ்நாடு அரசாங்கம்தான் செய்ய உள்ளது, எனவே ஏன் நடுக்கமும் பயமும் வருகிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.மேலும், நடிகர் விஜய் கொடுத்த பணத்தை ஒரு பெண்மணி திருப்பி அனுப்பியது குறித்துப் பேசிய போது, ஒரு சிலர் உதவி செய்யும் நோக்கத்துடன் கொடுப்பார்கள் என்றும், சிலர் உதவியை வாங்க மறுப்பார்கள் என்றும், சிலர் யாரிடமும் உதவி வாங்காமல் வாழ வேண்டும் என நினைப்பார்கள் என்றும், அந்த நோக்கத்தில் அந்தப் பெண்மணி பணத்தைத் திருப்பி அனுப்பி இருக்கலாம் என்றும் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top