கோவை:கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி கோவை தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சி!!!!

sen reporter
0

கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி கோவை தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று உலர் பழங்களில் மதுபானங்களைஊற்றிகலவைதயாரித்துகொண்டாடினர்.இயேசு கிறிஸ்து அவதரித்த நாளான டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்களின் புனித பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை துவக்க விழாவாக கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிக்கும் நிகழ்வாக கருதப்படுகிறது.இந்த நிலையில் கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள M inn நட்சத்திர விடுதியில் கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சி விடுதி அரங்கில் விமரிசையாக நடைபெற்றது. அதன் நிறுவன தலைமை சமையல் கலை நிபுணர் ராஜா தலைமையில் நடைபெற்ற ஆயிரம் கிலோ எடையிலான கேக் தயாரிக்கும் நிகழ்ச்சியில் விடுதி ஊழியர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று இருந்தனர்.அதில் பிரபல நிறுவனமான மார்ட்டின் குழும நிறுவனங்களின் இயக்குனர் லீமா ரோஸ் மார்ட்டின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நிலையில் சிவப்பு நிற உடையில் தலையில் சிவப்பு நிற கிறிஸ்துமஸ் தொப்பி அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் அங்கிருந்த ராட்சத ட்ரேயில் கிறிஸ்துமஸ் மரம் நட்சத்திரம் மற்றும் ஏசு கிறிஸ்து போன்று பரப்பி வைக்கப்பட்டிருந்த உலர் பழங்களில் பிராந்தி, விஸ்கி,ரம், ஒயின் போன்ற மதுபானங்களை ஊற்றி கலவையை உருவாக்கினர். முந்திரி, பாதாம், பிஸ்தா, கிஸ்மிஸ், செர்ரி, பேரிச்சை, அத்திப்பழம், ப்ளூபெர்ரி உட்பட பத்துக்கும் மேற்பட்ட உலர் பழங்கள் சுமார் 300 கிலோ எடையில் அங்கு வைக்கப்பட்டிருந்த சூழலில் அதில் சுமார் 100 லிட்டருக்கும் மேல் மதுபானங்கள் மற்றும் தேன் ஆகியவற்றை ஊற்றிய பெண்கள் தங்கள் கைகளால் அதனை கலந்தபடியே கிறிஸ்துமஸ் பாடல்களை பாடியும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அதில் பங்கேற்று கலவையை உருவாக்கிய பெண்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் விடுதி நிர்வாகம் சார்பில் உலர் பழங்களுக்கு இடையே வெள்ளி நாணயங்களும் வைக்கப்பட்டிருந்த நிலையில் கலவையை கலந்த பெண்களுக்கு கிடைத்த வெள்ளி நாணயங்கள் அவர்களுக்கே பரிசாக அளிக்கப்பட்டன. இந்த கேக் கலவை 40 நாட்கள் காற்று புகாத பெரிய அளவிலான ட்ரம்களில் மூடி வைக்கப்பட்டு அதன் பிறகு கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பாக கேக் தயாரிக்கப்படும் என அவ்விடுதியின் சமையல் கலை நிபுணர்கள் தெரிவித்தனர்......

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top