கோவை:ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயத்தில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது!!!
11/16/2025
0
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஊடகத்துறை தேசிய ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் தலைமையில் கோவை பந்தய சாலையில் உள்ள சாரதாம்பாள் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் நீண்ட ஆயுள் பெற சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்த பகுதியைசேர்ந்தபொதுமக்களுக்குஇனிப்புகள்வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏழைப் பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
