தூத்துக்குடி:கணக்கெடுப்பு படிவத்தினை நிரப்பி வழங்கினால் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற இயலும் ஆட்சியர் தகவல்!!!
11/21/2025
0
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தின் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதற்கும் திரும்ப பெறுவதற்கும் நவ.22, 23ல் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. படிவத்தை நிரப்பி வழங்கினால் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற இயலும் என்று ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட வாக்காளர்களின் அன்பான கவனத்திற்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை (22-11-2025) (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (23-11-2025) (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு தீவிர திருத்தத்தின் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதற்கும் திரும்ப பெறுவதற்கும் சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி வாக்காளர்கள் அனைவரும் கணக்கெடுப்பு படிவத்தினை பூர்த்தி செய்து திரும்ப வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த கணக்கெடுப்பு படிவத்தினை நிரப்பி வழங்கினால் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற இயலும் என்பதாலும் மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்கு குறுகிய கால அவகாசமே உள்ளதால் இம்முகாம்களை நன்கு பயன்படுத்தி தங்களது பெயர்களை விடுபடா வண்ணம் படிவத்தினை பூர்த்தி செய்து அளித்திட மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
