குறிப்பாக மாணவர்களின் கல்வி நிதியை ஒதுக்க மறுக்கிறது. இவை மத்திய அரசு தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வருவதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இவை மட்டுமின்றி தற்போது கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களையும் பாஜக அரசு முடக்கியுள்ளது.ஒரு நகரத்தில் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் மேலாக இருந்தால்தான் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு கூறி இருப்பது பொய்யான வாதம். இதனை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கமாட்டோம். மெட்ரோ திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபடுவோம்.காவல்துறை கூறும் காரணம் என்ன?மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மாற்றான் தாய் மனப்போக்குடன் அணுகுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு உடனடியாக மத்திய அரசு செவி சாய்த்து மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றார்.மதுரை மாநகர் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக 11,368 கோடி ரூபாய் மதிப்பிலான விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருந்தது.ஆனால். 2017ஆம் ஆண்டின் மெட்ரோ ரயில் கொள்கை அடிப்படையில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் தான் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும். கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் மொத்தம் மக்கள்தொகை 15.8 லட்சம் தான் எனக் கூறி, மத்திய அரசு இந்தத் திட்டத்தை நிராகரித்துள்ளது.
கோவை, மதுரை, மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த மத்திய அரசு ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய திமுக கூட்டணிக் கட்சிகள்!!!
11/21/2025
0
மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என்று மதுரையில் திமுக கூட்டணிக் கட்சியினர் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.மாணவர்களின் கல்வி நிதி முதல் மெட்ரோ ரயில் திட்டம் வரை அனைத்திலும் தமிழ்நாட்டை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் பாஜக வஞ்சித்து வருவதாக திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.மதுரை மற்றும் கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மதுரை பழங்காநத்தம் சந்திப்பில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கோ.தளபதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு விவகாரங்களில் மத்தியஅரசைகண்டித்துகோஷங்கள்எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில்காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் நீதி மையம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அப்போது பேசிய மதுரை மாவட்ட திமுக மூத்த நிர்வாகி பொன் முத்துராமலிங்கம், தமிழ்நாட்டிற்கான ஜிஎஸ்டி நிதி பகிர்வில் மத்திய அரசு பாரபட்சத்துடன் செயல்பட்டு வருகிறது.
