வேலூர்:உலக நீரிழிவு நோய் நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் இலவச நீரிழிவு பரிசோதனை!!!

sen reporter
0

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கம், காட்பாடி லைஃப் லைன் ரத்த பரிசோதனை மையம் ஆர்.ஐ.சி.டி., கல்வி நிறுவனம் இணைந்து உலக நீரிழிவு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியினை காட்பாடி காவல் நிலையம் அருகிலிருந்து தொடங்கி வள்ளிமலை கூட்டுசாலை, பெத்தேல் பள்ளி வழியாக கே.ஆர்.எஸ். நகர் வரை சென்று நிறைவடைந்தது.இந்த பேரணிக்கு காட்பாடி ரெட்கிராஸ் சங்க அவைத்தலைவர் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.  லைஃப் லைன் ரத்தப் பரிசோதனை மையத்தின் இயக்குநர் எஸ்.பாபுஜனார்த்தனன் வரவேற்றார்.  கல்வி நிறுவன இயக்குநர் கே.எஸ்.அஷ்ரப், வேலூர் ரத்த மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.சிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  காட்பாடி லயன்ஸ் சங்கத்தின் தலைவர் கே.சோகாராமன், பி.என்.ராமச்சந்திரன் ஆகியோர் மற்றும் கல்வி நிறுவன மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.பின்னர் லைஃப் லைன் ரத்த பரிசோதனை நிலையத்தில் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், ரத்த அளவு ஆகிய பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன.  மையத்தின் செவிலியர் வேண்டா, தொழில்நுட்ப வல்லுநர்கள் ஹேமமாலினி, பவித்ரா குழுவினர் இலவச பரிசோதனைகளை மேற்கொண்டனர். முகாமில் 100 பேர் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர்.இந்த நிகழ்வில் பேசிய ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் கூறியதாவது  ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதி, உலக நீரிழிவு தினம் ஆகும். நீரிழிவு நோயின் விளைவுகள் மற்றும் நோயால் ஏற்படும் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நீரிழிவு நோய்க்கான ஆபத்தில் உள்ள நபர்களை பரிசோதிக்க ஊக்குவிப்பதற்காக தகவல்களைப் பரப்புதல், உலகளவில் நீரிழிவு நோய் ஒரு பெரும் சுகாதார சவாலாக மாறியுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கும் இந்த நோய், நீண்டகால மருத்துவ கவனிப்பு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை அவசியப்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதி, நீரிழிவு நோயைப் பற்றி உலகமெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உலக நீரிழிவு தினம் (World Diabetes Day) அனுசரிக்கப்படுகிறது. 2025 உலக நீரிழிவு தினத்தின் கருப்பொருள் “Diabetes & Wellbeing”, நீரிழிவு நோய் என்பது ஒரு மருத்துவ பிரச்சனை மட்டுமல்ல, அது ஒரு முழுமையான வாழ்க்கை முறை சவால் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. இந்த நாளை முன்னிட்டு, அனைவரும் நீரிழிவு பற்றிய விழிப்புணர்வை அதிகரித்து, ஆரோக்கியமான வாழ்வுக்கான சிறிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம். என்றார்.முடிவில் அகில் லேப் மேலாளர் பிரசாந்த் நன்றி கூறினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top