கோவை:சுகுணா சர்வதேசப்பள்ளியின் விளையாட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது!!!

sen reporter
0

சுகுணா சர்வதேசப் பள்ளியின் விளையாட்டு விழா கோவை காளப்பட்டி நேரு நகரில் உள்ள சுகுணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.சுகுணா அறக்கட்டளை அறங்காவலர் இராஜாமணி அம்மாள், சுகுணா தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் இலட்சுமி நாராயணசுவாமி, தாளாளர்  சுகுணா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், இணை நிர்வாக இயக்குநர் அனீஸ் குமார்.மற்றும்  சாந்தினி அனீஸ்குமார், பள்ளியின் இயக்குநர் அந்தோணி ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  கோவை என்.சி.சி. குழு (NCC) தலைமையகத்தின் நிர்வாக அதிகாரி கர்னல்.  சி.எஸ்.டி சுவாமி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி விழாவினைத் தொடங்கி வைத்தார்.தொடர்ந்து அவருக்கு பள்ளியின்  நிலம், நீர், காற்று, நெருப்பு முதலிய அணி மாணவர்கள்  அணிவகுப்பு  செய்து மரியாதை செய்தனர்.தொடர்ந்து நிகழ்ச்சியில்  பேசிய அவர்,இராணுவத்தில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும்,இராணுவத்தில் பணியாற்ற மாணவர்கள் முன் வர வேண்டும் என கூறினார்..விழாவில்  கௌரவ விருந்தினராக தமிழ்நாடு மற்றும் கேரளா ஸ்போர்ட்ஸ் வில்லேஜ்  (Sports Village) மண்டலத் தலைவர், முனைவர். அசோக்குமார் காசிராஜன் கலந்து கொண்டார்.நிகழ்ச்சியில் முதல்வர் பத்மாவதி பஞ்சாபகேஷன், மழலையர் பள்ளியின் பொறுப்பாளர் . இலட்சுமிராமநாதன், நடுநிலைப் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர். மஞ்சுளா குமாரி ஆகியோர் விழாவிற்கு வந்தருந்த அனைவரையும்   வரவேற்றனர்.விழாவின் ஒரு பகுதியாக மாணவர்களின் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தும் வகையில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள  மாணவர்களின் பல்வேறு விளையாட்டு நிகழ்வு சார்ந்த பயிற்சி நடனங்கள் நடைப்பெற்றன.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top