வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பாகருஷேன் வீதியில் உள்ள தமிழக மக்கள் கட்சியின் தலைவர் ஜி. டி .பூவரசன் இல்லத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் தினங்களை முன்னிட்டு ஏழை, எளியவர்களுக்கு இலவச வேட்டி ,சேலைகள் மற்றும் இலவச அரிசி வழங்கும் விழா கட்சியின் நிறுவனத் தலைவர் ஜி. டி .பூவரசன் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கே. குமரேசன் கட்சியின் நிர்வாகிகளான எம். முத்தமிழன், கார்த்திக், ராஜ்குமார், லோகேஷ், ராகுல், ஆர். சதீஷ், ஆர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 1450 பேர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளும், அரிசியும் வழங்கப்பட்டது.
வேலூர்:பேரணாம்பட்டில் தமிழக மக்கள் கழகம் கட்சி சார்பில் கட்சியின் தலைவர் ஜி.டி.பூவரசன்1450 பேர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் இலவச அரிசி வழங்கல்!!!
12/31/2025
0
