சென்னை:எஸ்.ஐ.ஆர். பணிக்கான கால அவகாசம் இரண்டாவது முறையாக மேலும் 3 நாள்கள் நீட்டிப்பு!!!

sen reporter
0

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கின. ஒருமாத காலம் நடைபெறும் இப்பணிகள் டிசம்பர் 4-ம் தேதி நிறைவடையும் என்று தேர்தல் ஆணையம் அப்போது அறிவித்திருந்தது. ஒரு மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படும் முக்கியமான இந்தப் பணியை 30 நாள்களில் மேற்கொள்வது எப்படி சாத்தியம் என்று பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுந்தன.இந்த நிலையில், எஸ்.ஐ. ஆர்., பணிக்கான கால அவகாசம் ஒருவாரம் நீட்டிக்கப்படுவதாக, அதாவது டிசம்பர் 11-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நவம்பர் 30-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், இப்பணியை மேற்கொள்வதற்கான கால அவகாசம் மேலும் மூன்று நாட்களுக்கு, அதாவது டிசம்பர் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அத்துடன், தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19-ம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டை போன்றே குஜராத் மாநிலத்திலும் இப்பணிக்கான கால அவகாசம் டிசம்பர் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும், அந்தமான்- நிக்கோபார் தீவுகளிலும் எஸ்.ஐ. ஆர் பணிகளுக்கான காலஅவகாசம் டிசம்பர் 18-ம் தேதி வரையிலும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் இப்பணி்க்கான அவகாசம் வரும் 26 -ம் தேதி வரையும் நீட்டிக்கப்படுகிறது என்றும் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உட்பட 3 யூனியன் பிரதேசங்களில் தற்போது எஸ்.ஐ.ஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் உரையாற்றினர். அப்போது எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள், எஸ்.ஐ.ஆர் தொடர்பாக முன்வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு மத்திய சட்டத் துறை அமைச்சர்அர்ஜுன் ராம் மேக்வால் பதிலளித்தார். இந்த நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் SIR பணிகளுக்கான கால அவகாசம் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top