தூத்துக்குடி:மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஒரு கோடி பனை விதை நடும் பணி ஏழு ஆண்டுகளாக தொடர்கிறது!!!
12/11/2025
0
தூத்துக்குடி மாவட்டம் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஒரு கோடி பனை விதை நடும் பணியின் தொடர்ச்சியாக நீர் நிலைகளை பாதுகாக்க செம்மறி புது குளம் கரையில் பனை விதை நடும் பணியை மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் எஸ்.ஜே. கென்னடி தொடங்கி வைத்தார்.தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகமான பனை மரங்கள் இருந்துள்ளது. அவைகள் பல்வேறு காரணங்களுக்காக அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பல இயற்கை சீற்றங்கள் ஏற்படுகிறது. இயற்கையை பாதுகாக்க, பாரம்பரியத்தை போற்றிபாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க வேண்டும் என்ற சேவை மனப்பான்மையோடு, சமூக அக்கறையோடு , எந்தவிதமான எதிர்பாற்புமின்றி மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 7 ஆண்டுகளாக நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஆற்றங்கரை, குளத்தாங்கரை, வாய்க்காங்கரை, போன்ற நீர் நிலைகளிலும், புயல், சூறாவளி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் தடுக்க கடற்கரை ஓரங்களிலும் மற்றும் சாலை ஓரங்களிலும், நிலத்தடி நீரை மேம்படுத்த அரசு புறம்போக்கு இடங்களிலும், தொடர்ந்து ஒரு கோடி பனை மர விதைகளை விதைத்து வருகிறார்கள்.இதன் தொடர்ச்சியாக மதர் சமூக சேவை நிறுவனம், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கம், செல்லையா குரூப்ஸ் இன்ப்ராஸ்டரக்சர் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா உடன்குடி ஒன்றியத்துக்குட்பட்ட செம்மறி புதுக்குளம் கரையிலும், சாலை ஓரங்களிலும், மதர் சமூக சேவை நிறுவன செயலாளரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில பொதுச் செயலாளருமான செ.செல்வக்குமார் தலைமை தாங்கினார். செல்லையா குரூப்ஸ் இன்ப்ராஸ்டரக்சர் இயக்குனர் எஸ்.இசைகலா அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க உடன்குடி ஒன்றிய செயலாளர் செ.மகராஜன், த.பிரின்ஸ் மதன், மு.சரவணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். விழாவிற்கு சிறப்பு விருந்தினராகக் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், தூத்துக்குடி மாவட்ட நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்க தலைவரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் எஸ்.ஜே. கென்னடி பனை விதை நடும் பணியை துவக்கி வைத்தார். இதன் தொடர்ந்து செம்மறிப் புதுக்குளம் கரையோரங்களிலும் சாலை ஓரங்களிலும் தொடர்ந்து பனைமர விதைகள் விதைக்கப்பட்டது.நிறைவில் மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர் எஸ்.பானுமதி நன்றி கூறினார்.மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க நிர்வாகிகள், செல்லையா குரூப்ஸ் இன்ப்ராஸ்டரக்சர் சார்ந்தவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
