வேலூரில்:ஜாக்டோ-ஜியோ பேரமைப்பினர் உரிமை மீட்பு உண்ணாவிரதம்!!!
12/13/2025
0
ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் வேலூர் மாவட்டத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரின் 2021 தேர்தல் கால வாக்குறுதியின்படி லட்சக்கணக்கான அரசுஊழியர்,ஆசிரியர்,அரசுப்பணியளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி 13.12.2025 ஒரு நாள் மாவட்ட தலைநகரில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆஞ்சநேயர் கோவில் அருகில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எம்.ஜெயகாந்தன்,எம்.எஸ்.தீனதயாளன், ஆ.ஜோசப்அன்னையா, ஜி.சீனிவாசன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் சி.சேகர், உண்ணாவிரத போராட்டத்தினை தொடங்கி வைத்து பேசினார். மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு அரசுக்கல்லூரி ஆசிரியர் கழக சோ.சுரேஷ் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்து நிறைவுரையாற்றினார்.மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் செ.நா.ஜனார்த்தனன், முகமதுஷாநவாஸ், ஜி.கோபி, அக்ரி.எ.இராமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர், ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத்தலைவர் எஸ்.ரஞ்சன்தயாளதாஸ், மாவட்ட உயர்மட்டக்குழு நிர்வாகிகள் எம்.எஸ்.செல்வகுமார், ஆர்.ஜெயக்குமார், ஜி.டி.பாபு, வாரா, அல்போன்ஸ்கிரி, பெ.இளங்கோ, வருவாய் துறை அலுவலர் சங்க வி.ரமேஷ், தே.வேந்தன், சுமதி, எம்.கோட்டீஸ்வரன், ம.தேவசேனன், ஆதிகேசவன், துரைராஜ், உள்ளிட்ட 56 வகையான ஆசிரியர் அரசு ஊழியர் பணியாளர் சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் பேசினர். இப்போராட்டத்தில் மாவட்டம் முழுவதிலிருந்து 100 பெண்கள் உள்பட ஆசிரியர், அரசு ஊழியர், கல்லூரி ஆசிரியர்கள் பணியாளர்கள் என 500 பேர் பங்கேற்றனர்முடிவில் போராட்டக்குழு உறுப்பினர் அ.சேகர் நன்றி கூறினார்.
