வேலூர்:தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்!!!
12/28/2025
0
வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள புஷ்பம்மாள் ஞானசம்பந்த முதலியார் திருமண மண்டபத்தில் மாநில தலைவர் டாக்டர் பி. பாஸ்கர் தலைமையில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில கௌரவ தலைவர் சி. ராஜவேலு, மாநில பொதுச் செயலாளர் பி. பாலாஜி சிங், சட்ட ஆலோசகர் ஜி .பிரபாகர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் டி .கே. ரமேஷ் வரவேற்றார். தலைமை உரையாற்றிய மாநில கவுரவத் தலைவர் சி. ராஜவேலு குறிப்பிடுகையில், தமிழக அரசிடம் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்க மாநில தலைவர் தலைமையில் சென்னை சென்று முதல்வரின் சிறப்பு செயலர் பல்வேறு துறை செயலர்கள் மற்றும் இயக்குனர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திய விவரங்களை விரிவாக எடுத்துரைத்தார். இந்த மாநில பொதுக் குழுவில் தமிழ்நாடு அரசுத்துறை பணியாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ். ரவிக்குமார், மாநில கவுரவத் தலைவர் ஜோதி இராமலிங்கம், மாநில இணை செயலாளர் வி. ஸ்ரீதர், மாவட்ட செயலாளர் நந்தகுமார், மாவட்ட பொருளாளர் எ. மணி, மாவட்ட துணை செயலாளர் முத்துசாமி, முனுசாமி, மாவட்ட கவுரவ தலைவர்கள் ஆர். சம்பத், ஸ்ரீ தாண்டவமூர்த்தி, மாவட்ட நிர்வாகி ஜெயபால் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அதன் பிறகு தமிழ்நாடு அரசு தோட்டக்கலைப் பண்ணை பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் சிவகங்கை மாவட்டம் சின்னத்தம்பி, தென்காசி மாவட்டம் சங்கர் ,தஞ்சாவூர் மாவட்டம் செந்தில், புதுக்கோட்டை மாவட்டம் சோலையப்பன், நீலகிரி மாவட்டம் ராம்குமார், கரூர் மாவட்டம் அருள், கிருஷ்ணகிரி மாவட்டம் பெருமாள், காஞ்சனா, கடலூர் மாவட்டம் ரங்கநாதன், முக்கனி, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ரத்தினம், சேலம் மாவட்டம் மாதேஸ்வரி, கீர்த்தன், மணியார் குண்டம் வேலுமணி, ஏற்காடு கணேசன் மற்றும் தமிழகம் முழுவதும் அனைத்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து இணைப்பு சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதைத் தொடர்ந்து கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்க மாநில பொதுக்குழு தீர்மானங்கள் பின்வருமாறு: தமிழக அரசு பணியாளர்களுக்கு முன்பு போலவே பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய தமிழக அரசை இந்த பொதுக்குழு வேண்டுகிறது. தமிழக அரசால் தற்போது வெளியிடப்பட்ட அரசாணை எண் 139 நாள் 30. 10. 2022 இன் படி தமிழகம் முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் இனி அனைத்து காலிப் பணியிடங்களையும் மற்றும் இனி ஏற்பட போகின்ற காலி பணியிடங்களையும் அவுட் சோர்சிங் முறையில் டெண்டர் விட்டு தற்காலிக முறையில் பணி அமர்த்தும் படி வந்த அரசாணையை திரும்ப பெற இந்த பொதுக்குழு வேண்டுகிறது. மத்திய அரசை போலவே மாநில அரசும் எட்டாவது ஊதிய குழுவை அமைத்து அதன் பலன்களை 1.1.2026 முதல் வழங்க தமிழக அரசை இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. தமிழக அரசுடன் மற்றும் அலுவலர்களுடன் தொடர்பு கொள்ளவும் கடிதங்கள் அனுப்பவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் மாநில கௌரவத் தலைவர் ,மாநில தலைவர் மற்றும் மாநில பொதுச் செயலாளருக்கு இந்த பொதுக்குழு அங்கீகாரம் அளிக்கிறது. தமிழ்நாடு அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை ,பதவி உயர்வு, குடும்ப நலநிதி வழங்க இந்த பொதுக்குழு தமிழக அரசை வேண்டுகிறது. தமிழ்நாடு அரசு தோட்டக்கலை பண்ணைகள் மற்றும் பேரூராட்சிகளில் பத்தாண்டுகள் பணி முடித்த தினக் கூலி பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய இந்த பொதுக்குழு வேண்டுகிறது. தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ துறைகளில் பணிபுரியும் தொகுப் பூதிய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய இந்த பொதுக்குழு வேண்டுகிறது. தமிழக அரசில் காலியாக உள்ள சுமார் 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பேரூராட்சிகளில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களுக்கு தினக்கூலி ரூபாய் 600 ஆக உயர்த்தி வழங்க இந்த பொதுக்குழு வேண்டுகிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களுக்கு தினக்கூலி ரூபாய் 600 ஆக உயர்த்தி வழங்க இந்த பொதுக்குழு வேண்டுகிறது. தமிழகம் முழுவதும் 628 பேரூராட்சிகள் இருந்தது. தற்போது ஒரு சில பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றப்பட்ட பிறகு தற்போது 430 பேரூராட்சிகளே உள்ளன. இதனால் பணியாளர்களுக்கு பதவி உயர்வு போன்றவை பாதிக்கப்படுகிறது. எனவே பெரிய பேரூராட்சிகளான கணியம்பாடி, அணைக்கட்டு மற்றும் பொன்னை போன்ற சுமார் 150 ஊராட்சிகளை பேரூராட்சிகளாக மாற்ற இந்த பொது குழு வேண்டுகிறது. மாவட்டங்கள் பிரிக்கப்படும்போது பேரூராட்சிகளுக்கும் மாவட்ட அதிகாரிகள் இதுவரை தனித்தனியாக நியமிக்கப்படவில்லை. உதாரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஒருவரே வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை பார்க்க வேண்டிய நிலை உள்ளது. எனவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் நியமிக்கப்பட வேண்டும் என இந்த பொதுக்குழு தமிழக அரசை வேண்டுகிறது. வேலூர் போன்ற மாநகராட்சிகளில் மாநகராட்சியாக மாற்றப்பட்டாலும் அரசு பணியாளர்களுக்கு அதற்கு ஈடான ஹெச்ஆர்ஏ மற்றும் சி சி ஏ வழங்க பரிந்துரைக்கும் படி இந்த பொதுக்குழு வேண்டுகிறது .தமிழக முதல்வர், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மற்றும் துணை செயலாளர்களை சந்திக்க தேதி வழங்கியவுடன் மாநில நிர்வாகிகள் அனைவரும் சென்னைக்கு சென்று தமிழக முதல்வரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வேண்டுவது என இந்த பொதுக்குழு முடிவெடுக்கிறது. தமிழக முதல்வர் தமிழகத்தில் உள்ள அனைத்து சங்க நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யுமாறு இந்த பொதுக்குழு வேண்டுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து பொது சங்கங்களும் தமிழக அரசு பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் வரும் ஜனவரி 6 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது. அதில் நமது சங்கமும் கலந்து செயல்பட இந்த பொதுக்குழு அங்கீகாரம் அளிக்கிறது உள்ளிட்ட 16க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக மாவட்ட அமைப்பு செயலாளர் மதன்குமார் நன்றி கூற இந்த பொதுக்குழு இனிதே நிறைவு பெற்றது.
