வேலூரில் மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் கண் சிகிச்சை முகாம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!!!

sen reporter
0

மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் கமல் ஹாசனின்பிறந்தநாள்கொண்டாட்டத்தின்தொடர்ச்சியாக,வேலூர் மநீம மாவட்டம் சார்பில், மாவட்டச் செயலாளர் எஸ். ஸ்டாலின் செல்வராஜ் தலைமையில்,காஞ்சிபுரம் மண்டலச் செயலாளர் இரா. அருள் முன்னிலையில்,உறுப்பினர் சேர்க்கை முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு மற்றும் CMC கண் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாமை சிறப்பாக நடத்தியது.நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை கட்சியின் துணைத் தலைவர் ஏ. ஜி.மௌரியா இ. கா. ப.,(ஓய்வு), உறுப்பினர் சேர்க்கை முகாமை தலைமை நிலையச் செயலாளர் செந்தில் ஆறுமுகமும் தொடங்கி வைத்து,மய்யக் கொள்கை மற்றும் கோட்பாடுகள் குறித்தும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் நிர்வாகிகளிடையே சிறப்புரையாற்றினர்.இதைத் தொடர்ந்து நடைபெற்ற கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, கண் சம்பந்தமான மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனைகளை மேற்கொண்டு பயனடைந்தனர்.இந்நிகழ்வில் மண்டல அமைப்பாளர் டி. கே. ஏசு, திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரகாஷ் சந்திரா, மாவட்டச் செயலாளர்கள் எஸ். கிருஷ்ணமூர்த்தி, விஜயகுமார், மாவட்ட அமைப்பாளர்கள் இராஜேந்திரன், ஜி.சங்கர், எம்.சக்திவேல், மாவட்டப் பொருளாளர் ஜே. ராஜா, மணி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஆதிபாஷா, டி. அண்ணாமலை, நந்தகோபால், ஒன்றியச் செயலாளர் எழிலரசன், நகரச் செயலாளர்கள் வி. மகேஷ், கார்த்திகேயன், கார்த்திக், சார்லஸ், குமார், ரமேஷ், இக்பால், கிளைச் செயலாளர்கள் முரளி, சௌந்தராஜன், சரவணன், மணிகண்டன், பவானி, பிரியா, வெங்கடேசன், பாஸ்கரன், ரகு, கிருபாரவி, தமீம், முனிநாதன், சமியுல்லா, முன்னாள் மாவட்டச் செயலாளர் பாஸ்கர் ஆகியோருடன் மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், கண் மருத்துமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top