திருவண்ணாமலை: செய்யாறு வந்தவாசியில் த.வெ.க.,வின் வேகம் அதிகரித்துள்ளது!!!
12/22/2025
0
செய்யாறில் திமுக., - அதிமுக., ஆகிய மாற்று கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் 100 பேர் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில், திருவண்ணாமலை கிழக்குப ர ஜலந்தர் ஷமாவட்ட செயலாளர் உதயகுமார் முன்னிலையில் இணைந்தனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தங்களது பலத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கூட்டணி குறித்தும் மறைமுகமாக பேச்சு வார்த்தையும் நடத்துகின்றனர். தமிழகத்தில் முதன்முதலாக அரசியல் களத்தில் இறங்கி, 2026 சட்டசபை தேர்தலை, தமிழக வெற்றிக் கழகம் சந்திக்க உள்ளது. இதற்காக த.வெ.க., தலைவர் விஜய் 'ரோட் சோ' பொதுக் கூட்டங்கள் அவ்வப்போது நடத்தி மக்களை சந்தித்து வருகிறார். இந்த கூட்டங்களில் இளைஞர் பட்டாலும் 'அலை போல்' திரண்டு த.வெ.க.,விற்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் பலத்தை சேர்த்து வருகின்றனர். இதை பார்க்கும் மற்ற கட்சியினர் விஜய்க்கு எப்படி சவால் கொடுப்பது என்று ஆலோசிக்க துவங்கி விட்டனர். இன்னும் சில கட்சியினர் த.வெ.க.,வில் கூட்டணி அமைத்துக் கொள்ள வேண்டும் என, முடிவையும் எடுத்து விட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், த.வெ.க.,வின் கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தனது கட்சியை பலப்படுத்தும் வகையில் இரவு - பகலாக பொறுப்பாளர்களையும் - தொண்டர்களையும் சந்தித்து கட்சிப் பணியை ஆற்றி வருகிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் செய்யார், வந்தவாசி சட்டசபை தொகுதிகளில் பொது மக்களால் கொண்டு வரப்படும் கோரிக்கைகளையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து நிறைவேற்றி வருகின்றார் உதயகுமார். நேற்று செய்யாறு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வெம்பாக்கம் அடுத்த குடியான்தண்டலம், பூனைத்தாங்கல் மேனலூர், சுருட்டல் ஆகிய நான்கு கிராமங்களைச் சேர்ந்த திமுக., மற்றும் அதிமுக., கட்சிகளை சேர்ந்த 100 தொண்டர்கள், வெம்பாக்கம் வட கிழக்கு ஒன்றிய செயலாளர் பாரதி தலைமையில் த.வெ.க.,வில் இணையும் நிகழ்ச்சி செய்யார் புறவழி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. திருவண்ணாமலை த.வெ.க.,வின் கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் - மேற்கண்ட மாற்றுக் கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி, சால்வை அணிவித்தார்.இதையடுத்து இவரது முன்னிலையில் அனைவரும் உறுதிமொழி ஏற்று த.வெ.க.,வில் இணைந்தனர்.
