வேலூர்:குடியாத்தம் தொழிலதிபர் அருண்குமார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் ஐக்கியம்!!!!
12/07/2025
0
சென்னையில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் வேலூர் மாவட்டம், குடியாத்தத்தைச் சேர்ந்த தொழிலதிபர் 'மகா சுவாதி தைலம்' அருண்குமார் இணைந்தார். தமிழக வெற்றிக் கழக வேலூர் மாவட்ட பிரமுகர் குடியாத்தம் வெங்கடேசன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். தவெகவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்தனர். இதில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின்போது கடலூர் ராஜா, காஞ்சிபுரம் ரமேஷ், விழுப்புரம் ஸ்டாலின் மற்றும் பலர் உடனிருந்தனர். தவெகவில் இணைந்த அனைவருக்கும் இயக்குநர் எஸ். ஏ .சந்திரசேகரன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
