கோவை:முதியோர்களுக்கான நட்சத்திர விடுதி பாணியில் ஒரு பிரத்யேக தங்கும் விடுதித் திட்டம் நிவாசன் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் சார்பில் அறிமுகம்!!!

sen reporter
0

 கோவையில் பல்வேறு வில்லா மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை வழங்கிவரும் நிவாசன் ஹோம்ஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவான நிவாசன் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் சார்பில், கோவை கொடிசியா - தண்ணீர்பந்தல் சாலை அருகே 'அத்வயா' என்ற பெயரில் முதியோர்களுக்கான நட்சத்திர விடுதி பாணியில் ஒரு பிரத்யேக தங்கும் விடுதித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கோயம்புத்தூரில் குத்தகை அடிப்படையில் (Lease-based) செயல்படும் முதல் சீனியர் லிவிங் கம்யூனிட்டி இதுவாகும்.இது குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று இந்த வளாகத்தில் நடைபெற்றது. நிவாசன் ஹோம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சீனிவாசன், இயக்குனர் அஸ்வின் மற்றும் நிவாசன் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்தின் இயக்குனர் வித்யா செய்தியாளர்களை சந்தித்தனர்.55 வயதுக்கு மேல் உள்ள நபர்கள், தங்களின் குடும்பத்திர் வெளிமாநிலங்கள்/ வெளிநாடுகளுக்கு செல்லும்போது முதியவர்களின் உடல், மனம் மற்றும் அமைதி என அனைத்து தேவைகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஒரு நவீன தங்கும் விடுதியில் மிகவும் சௌகரியமாக, நிம்மதியுடன் தங்கலாம் என கூறினர்.அத்வயா- வில் தங்கும் முதியவர்கள் தங்கள் சுதந்திரத்தை இழக்காமல், அதே சமயம் பாதுகாப்பாகவும் வசதியாகவும் வாழ்வதற்கு ஏற்ற வகையில் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தில் 48 ஒற்றை படுக்கையறை ஸ்டுடியோ அடுக்குமாடி குடியிருப்புகளும், 3இரண்டுபடுக்கையறைகுடியிருப்புகளும்உள்ளன.முதியோர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பிரபல பி.எஸ்.ஜி (PSG) மருத்துவமனை மற்றும் சேது ஆயுர்வேத மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.இந்த வளாகத்தில் 24 மணிநேர செவிலியர் கண்காணிப்பு மற்றும் அழைப்பின் பேரில் மருத்துவர் வசதி கிடைக்கும். 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியாகவோ அல்லது கணவன்-மனைவியாக இருவரும் இணைந்து தங்கலாம். குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இங்குத் தங்கலாம்.முன்பதிவு செய்ய 96003 59222 அல்லது842323071என்றஎண்களைஅழைக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top