கோவை:நாங்கள் நிச்சயமாக உறுதியாக இருக்கின்றோம் திராவிட மாடல் ஆட்சி தொடரும் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக தொடர்வர்!!!

sen reporter
0

கோவை விமானநிலையத்தில் கனிமொழி எம்பி பேட்டிசென்னையில் இருந்து கோவை வந்த திமுக மகளிரணி செயலாளரும், எம்பியுமான கனிமொழி அவர்களுக்கு கோவை விமானநிலையத்தில், கழக மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை. செந்தமிழ்ச் செல்வன், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் உள்ளிட்ட பலர் வரவேற்பு அளித்தனர்.தொடர்ந்து, கோவை விமான நிலையத்தில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்;- தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பொழுது, தேர்தல் அறிக்கை குழு கோவையில் இருக்கும் நிர்வாகிகள் இடம் கலந்து பேசி தேதி முடிவு செய்யப்படும்.தொழில் துறை விவசாயிகள் என அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்டகப்படும்.திமுக தயாரிக்கும் தேர்தல் அறிக்கை, மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பை சொல்வதாக இருக்க வேண்டும் என முதல்வர் சொல்லியிருக்கிறார்.இங்கிருக்கும் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கருத்துகள் கேட்கப்படும்.மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு தெரிந்து கொண்டு , எதையெல்லாம் செய்ய முடியுமோ, அதை வாக்குறுதியாக கொடுப்போம். அதில் எண்ணிக்கை என்று எதுவும் கணக்கு இல்லை, பெண்கள் பாதுகாப்பு குறித்து எதிர்கட்சி விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு,அரசியல் காரணங்களுக்காக தேர்தல் நேரத்தில் பல விமர்சனங்களை சில பேர் வைப்பார்கள். அதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. இங்கே இருக்கக்கூடிய நபர்களுக்கு தெரியும். இதற்கு மேல் சொல்லத் தேவையில்லை.யாருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்பது தேர்தல் முடிந்த பிறகு மிகத் தெளிவாக தெரியும். நாங்கள் நிச்சயமாக உறுதியாக இருக்கிறோம் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடரும். ஸ்டாலின் முதல்வராக தொடர்வார் என கனிமொழி எம்பி பேட்டியின்போது கூறினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top