வேலூர்:மகளிர் விடியல் பயணம் பேருந்து வழித்தடம் தொடக்க விழா!!!
12/29/2025
0
திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க வேலூர் தெற்கு மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி ஒடுகத்தூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர் வரை மகளிர் விடியல் பயணம் பேருந்து வழித்தடம் தொடக்க விழா நடந்தது. விழாவில் வேலூர் தெற்கு மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ. பி. நந்தகுமார் கலந்து கொண்டு கொடியசைத்து புதிய பேருந்து வழித்தடத்தை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, மத்திய ஒன்றிய செயலாளர் பி. வெங்கடேசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ.குமரபாண்டியன், பேரூராட்சி செயலாளர் பெருமாள் ராஜா, ஒன்றிய குழு தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு அரசு துறை அதிகாரிகள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள், பொது மக்கள் உடன் இருந்தனர்.
