வேலூர் மாவட்ட தலைவராக முத்து.சிலுப்பன், செயலாளராக முனைவர்.செ.நா.ஜனார்த்தனன், பொருளாளராக ஆர்.காயத்ரி, துணைத்தலைவர்களாக சா.குமரன், வீ.குமரன், டி.சசிகலா, இணை செயலாளர்களாக என்.கோட்டீஸ்வரி, பி.சுகுமாரன், செல்வராஜ் ஆகியோர் உள்ளிட்ட 27பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மாநாட்டின் வரவேற்பு குழு தலைவர் ஆர் சுதாகர் செயலாளர் ஆர் ராதாகிருஷ்ணன் பொருளாளர் பா.ராஜேந்திரன் எம்.ஈஸ்வரி ஆகியோர் மாநாட்டு ஏற்பாடுகளை செய்தனர். பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.வேலூர் மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்கிடவும் தரத்தை உயர்த்திடவும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்குவது
2.பள்ளிக்கல்வித்துறை யுனிசெப் நிறுவனத்துடன் அறிவியல் இயக்கம் இணைந்து அறிவியல் உபகரணங்கள் வழங்குவது
3.வானவில் மன்றம் மூலம் கணக்கு மற்றும் அறிவியல் ஆராய்ச்சி குறித்து பயிற்சியை பள்ளி மாணவர்களுக்கு வழங்குவது எனவும்
4.காட்பாடி - சேண்பாக்கம், காட்பாடி - சத்துவாச்சாரி இடையே நகர பேருந்துகளை இயக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
5.வேலூர் மாநகரம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பொது போக்குவரத்து மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக செப்பனிடப்பட வேண்டும் என்று அறிவியல் மாநாடு வேலூர் மாநகராட்சி மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்கிறது.
6.வேலூர் ஒனரறியம் மற்றும் மாநகரப்பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு மாணவர்கள் சிரமம் இன்றி சரியான நேரத்திற்கு செல்லவும், மாலையில் வீடு திரும்பவும் நேரங்களிலும், தேவையான சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அறிவியல் மாநாடு தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையையும், மாவட்ட நிருவாகத்தையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. முடிவில் வரவேற்பு குழு தலைவர் ஆர். சுதாகர் நன்றி கூறினார்.
