வேலூர்:காட்பாடியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா கோலாகலம்!!!
1/02/2026
0
வேலூர் மாநகராட்சி, காட்பாடி 1வது மண்டலம் தூய்மை பணியாளர்கள் பங்கேற்கும் புத்தாண்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. வேலூர் மாநகராட்சி ஆணையர், துணை மேயர் எம்.சுனில்குமார், 1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா, மாநகர நல அலுவலர், மாமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தூய்மை பணியாளர்கள் சார்பாக அன்போடு மகிழ்ச்சியோடு வரவேற்று உபசரிக்கப்பட்டது.தூய்மை பணியாளர்கள் சமத்துவ பொங்கல் வைத்து மகிழ்ச்சியோடு பொங்கலோ பொங்கல் என உற்சாகத்தோடு கொண்டாடி மகிழ்ந்தனர்.அவர்கள் அனைவரும் கோலப்போட்டி, உரியடிக்கும் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, மியூசிக் சேர், தண்ணீர் நிரப்பும் போட்டி இன்னும் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று குவித்தனர். இதை தொடர்ந்து அனைவருக்கும் மதிய உணவு வழங்கி நடனத்துடன் நிகழ்ச்சி விழா இனிதே முடிவடைந்தது. 200 தூய்மை பணியாளர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் 75 பணியாளர்கள் போட்டிகளில் பரிசுகளை தட்டிச் சென்றனர். 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியோடு மனநிறைவுடன் திரும்பிச் சென்றனர்.
