வேலூர்:திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்!!!!
1/26/2026
0
வேலூர் மாநகரத்தில் உள்ள அண்ணா கலையரங்கம் அருகில் வேலூர் தெற்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் எம்.தேவராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில்திமுக வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ. பி. நந்தகுமார், மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி, வேலூர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம் எல் ஏ, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு, தலைமை கழக பேச்சாளர்கள் பார்.இளங்கோவன், சேப்பாக்கம் பிரபாகரன், மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் ,துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
