திருவண்ணாமலை: செய்யாறில் தி.மு.க. பொறுப்பாளர் சுந்தர் கருணாநிதி தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கல்!!!

sen reporter
0

செய்யாறு கலைஞர் சிலை அருகே 22-ம் நாளான நேற்று மாவட்ட பொறியாளர் அணி பொறுப்பாளர் சந்தர் கருணாநிதிஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. செய்யாறு சட்ட மன்ற உறுப்பினர் ஜோதி, வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் எம்.கே.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதையடுத்து வெம்பாக்கம் மத்திய ஒன்றிய செயலாளர்கள் ஜே.சி.கே.சீனுவாசன், மாவட்ட சற்றுச்சூழல் அமைப்பு துணைத் தலைவர் கலைஞர் பாஸ்கர், சி.கே.ரவிக்குமார், மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ராணி, கவுன்சிலர்கள் ரவி, ரமேஷ், கோவேந்தன், ராஜலட்சுமி அண்ணாதுரை, கோபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தி.மு.க., பொறுப்பாளர்கள் மோகனவேல், அமுல்ராஜ், தியாகு, வந்தவாசி பிரபு, சிவச்சந்திர பிரகாஷ் ஆகியோர் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கினர்..

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top