திருவண்ணாமலை:செய்யாறில் த.வெ.க. சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தொடங்கி வைப்பு!!!

sen reporter
0

செய்யாறில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகளுக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் பரிசு கோப்பைகளை வழங்கி கௌரவித்தார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டசபை தொகுதிக்கு உட்பட்டது ராமகிருஷ்ணாபுரம், பெருங்கட்டூர், ராந்தம். இந்த கிராமங்களில் த.வெ.க., சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 32 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் 'நாக் அவுட்' முறையில் நடத்தப்பட்டது. தொடக்க நாள் போட்டிகளை திருவண்ணாமலை த.வெ.க.,வின் கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தொடங்கி வைத்தார். புருஷோத்தமன், யுவன் சங்கர், அரி கோபி, சரண்ராஜ், வெங்கடேசன் ஆகியோர் முன் நின்று போட்டிகளை நடத்தி வைத்தனர். காஞ்சிபுரம் விஜய் கிரிக்கெட் கிளப் அணியினர் முதலிடத்தையும், பில்லாந்தி கிரிக்கெட் கிளப் அணி இரண்டாம் இடத்தையும், நெடும்பிறை கிரிக்கெட் கிளப் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கம், கோப்பை, பண முடிப்பு ஆகியவற்றை கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் வழங்கி கௌரவித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top