திருவண்ணாமலை:செய்யாறு அருகே பள்ளி மாணவர்களுக்கு இடையே மாநில அளவிலான கபடி போட்டிகள் தொடங்கியது!!!
1/07/2026
0
செய்யாறு அருகே பள்ளி மாணவர்களுக்கிடையே, மாநில அளவில் கபடி போட்டிகள் நேற்று தொடங்கியது. 70க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.செய்யாறு அடுத்த வடபமாவந்தல் கிராமத்தில் அருள்மிகு மீனாட்சி அம்மன் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் 18 வயதுக்குட்பட்ட மாணவ - மாணவிகளுக்கான மாநில அளவிலான 2 நாள் கபடி போட்டிகள் நேற்று தொடங்கியது. கல்லூரி தாளாளர் ரா.கோகுல் போட்டிகளை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் கணேசன், நிர்வாக இயக்குநர் ரங்கராஜன், தலைமை சேர்க்கை அலுவலர் அரவிந்த் கிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி, மயிலாடுதுறை, ஆவடி, ராணிப்பேட்டை, சென்னை, திருவண்ணாமலை, உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த கபடி விளையாட்டு வீரர்கள் - வீராங்கனைகள் பங்கேற்றனர். கபடி விளையாட்டு வீரர்களுக்கு 'லீக்' முறையிலும், வீராங்கனைகளுக்கு 'நாக் அவுட்' முறையிலும் போட்டிகள் நடத்தப்பட்டது. முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு கோப்பை, பதக்கங்கள், சான்றுகள் வழங்கப்பட உள்ளன.சிறந்த விளையாட்டு வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு அடுத்த கட்ட போட்டிகளுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் அரிதாஸ், நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் என, பலரும் கலந்து கொண்டனர்.
