வேலூர்:காட்பாடி சுந்தரியம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு!!!

sen reporter
0

வேலூர் மாவட்டம், காட்பாடியில் சித்தூர் -கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுந்தரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மண்டல பூஜையும் நிறைவு பெற்றது. இந்நிலையில் சுந்தரியம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுந்தரியம்மனுக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதை தொடர்ந்து நடந்த தீப, தூப ஆராதனைக்கு பிறகு பக்தர்கள் சுந்தரியம்மனை தரிசனம் செய்தனர். பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாஸ்கர் அர்ச்சகர் செய்திருந்தார். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top