கோவை கம்பன் கழகத்தின் 54ம் ஆண்டு 2 நாள் விழா கோவையில் துவங்கியது!!!

sen reporter
0

கோவை கம்பன் கழகத்தின் 54ம் ஆண்டு 2 நாள் விழா கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள மணி மேல்நிலைப் பள்ளியின் நானி கலையரங்கில் நடைபெற்றது. பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இசைத் துறை மாணவர்களது தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் இரா. சுரேஷ்குமார் தலைமையேற்று பேசினார். சொ. சொ. மீ. சுந்தரம் "வாராதே வரவல்லாய்" என்ற தலைப்பில் இலக்கியப் பேருரை நிகழ்த்தினார். 54ம் ஆண்டு கம்பன் மலரினை மதுரை கழகத் தலைவர் அருட்செல்வர் சங்கர சீத்தாராமன் வெளியிட, கோயம்புத்தூர் சி.ஆர்.ஐ. பம்ஸ் நிறுவனங்களின் துணைத் தலைவர் ஜி. சௌந்தரராஜன் முதல் பிரதியினைப் பெற்று கொண்டார். கம்பன் கழகத்தின் துணைத்தலைவர் ஆர். ஆர். பாலசுந்தரம் அனைவரையும் வரவேற்றார். விருந்தினர்களை கம்பன் கழகத்தின் துணைத்தலைவர் வி. செல்வபதி சிறப்புச் செய்வார். மாநில அளவில் நடைபெற்ற கல்லூரி மாணாக்கருக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நீதியரசர் பரிசினை வழங்கி கௌரவித்தார் . கம்பன் கழகம் நடத்தி வரும் கம்பராமாயணத் தொடர் வகுப்பினை நடத்திக் கொடுத்த ஆசிரியர்களை சொ. சொ. மீ. சுந்தரம் கௌரவித்தார் . கம்பன் கழகத்தின் செயலாளர் க. முருகேசனின் நன்றியுரை கூறினார். 2ம் நாள்  நிகழ்வாக மாநில அளவில் நடத்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கிடையயோன பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் பங்குபெரும் சுழலும் சொல்லரங்கம் நடைபெறவுள்ளது.  அதனையடுத்து பொருள் தெறி அரங்கம், "நட்பிற்கோர் குகன்" என்ற நாட்டிய நாடகம் நடைபெற உள்ளது

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top