திருவண்ணாமலை: செய்யாறில் நலத் திட்ட உதவிகளை வழங்கினார் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன்!!
2/25/2026
0
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஆதிபராசக்தி கோவில் அருகில் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் அ.தி.மு.க., சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொது மக்களுக்கு வேட்டி - சேலை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொது மக்கள் அனைவருக்கும் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் அன்னதானம் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் கிளைக் கழக செயலாளர்கள் அசோகன், பச்சையப்பன், மாவட்ட அம்மா பேரவை தலைவர் தசரதன், மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவர் எஸ்.ஜே.கமலாகரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
