திருவண்ணாமலை: செய்யாறில் அ.தி.மு.க.,வின் முதற்கட்ட தேர்தல் அறிக்கை குறித்த விளக்க பொதுக்கூட்டம்!!!
2/27/2026
0
செய்யாறில் 2026 சட்டசபை தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க., சார்பில் முதற்கட்ட தேர்தல் அறிக்கையின் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. நகர செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன், முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் திரைப்பட இயக்கநர் நடிகர் ரவிமரியா, முன்னாள் மத்திய இணை அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு முதற்கட்டமாக வெளியிடப்பட்டுள்ள 15 தேர்தல் அறிக்கை குறித்து விளக்கி பேசினர். அ.தி.மு.க., ஆட்சி வந்த உடன் குடும்ப அட்டைதாரர் அனைவருக்கும் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என உறுதியளித்தனர். முன்னதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் அவைத் தலைவர் ஜனார்த்தனன், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஜாகிர் உசேன், ஒன்றிய செயலாளர்களான மகேந்திரன், அரங்கநாதன், திருமூலன், வயலூர் ராமநாதன், பச்சையப்பன், வந்தவாசி நகர செயலாளர் பாஷா, மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
