கோவை ரெட்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற புதிய கட்டிட திறப்பு நிகழ்வு!!!

sen reporter
0

கோவை ரெட்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற புதிய கட்டிட திறப்பு நிகழ்வில் மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்ஜி கலந்து கொண்டு சிறப்பித்தார்.இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் உட்பட ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர். முன்னதாக, மத்திய அமைச்சருக்கு கல்லூரி நிர்வாகத்தினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய பேராசிரியர்கள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய மத்திய அமைச்சர், நாட்டின் வளர்ச்சிக்கு மகளிர் பங்கு குறித்தும், இளைஞர்களின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையை ஊக்குவிக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டார்.இந்நிகழ்வினை அடுத்து இன்று மாலை 4 மணியளவில் கொடிசியா வளாகத்தில் நடைபெறும் தொழில்துறை கருத்தரங்கில் மத்திய அமைச்சர் பங்கேற்க உள்ளார்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top