வேலூர்:வானவில் மன்ற எளிய அறிவியல் பரிசோதனைகள் பயிற்சி முகாம்!!!
2/06/2026
0
அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக, புதியவற்றை அறிந்துகொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கவும் ‘வானவில் மன்றம்’ திட்டம் பள்ளிக் கல்வித் துறையின் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த கல்வியாண்டில் இது நான்காவது ஆண்டாக தொடருகிறது.இத்திட்டத்தின் வேலூர் மாவட்ட அளவிலான வானவில் மன்றத்தின் கருத்தாளர்கள் ஜனவரி மாத மீளாய்வு மற்றும் பிப்ரவரி மாத எளிய அறிவியல் கணித பரிசோதனை பயிற்சி முகாம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா அவர்களின் வழிகாட்டுதலின் படி வேலூர் ஒருங்கிணைந்த பள்ளிகல்வி திட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. வானவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சா.குமரன் தலைமை தாங்கி பேசினார். முன்னதாக இணை ஒருங்கிணைப்பாளர் கே.விஸ்வநாதன் வரவேற்று பேசினார்.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் முன்னிலை வகித்து பேசினார்.பள்ளிக்கல்வித்துறையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தி மன்ற செயல்பாடுகள் குறித்து பேசினார்.ஒலியானது காற்றலைகள் மூலம் பரவுகிறது என்பதை விளக்குதல், காந்தம், இயற்கை காந்தம், செயற்கை காந்தம், நிலையான காந்தம், தற்காலிக காந்தம், மின் காந்தம், நடனமாடும் பாம்பு மின்சாரம், மற்றும் காந்தவியல் பரிசோதனைகள் , வீழ்படிவாக்கல் முறை, கணிதம்- முழுக்களின் பெருக்கல், பட்டுநூல் எதிலிருந்து கிடைக்கிறது உள்ளிட்ட பரிசோதனைகளை செயல் விளக்கம் அளித்தனர்.வானவில் மன்ற கருத்தாளர்கள் ஆர்.முகமதுபாஷா, ஆர்.கோகுல், எஸ்.பிங்கிஷெல்சியா, தமிழ்வாணன், யு.சுருதி, எஸ்.கார்த்தி, என்.சரஸ்வதி, என்.வெண்ணிலா, கே.ஷகிலா, இ.பரிமளா ஆகியோர் பயிற்சியில் பங்கேற்று பரிசோதனைகள் செய்து பயிற்சி பெற்றனர்.
